மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை வென்ற வங்கதேசம்

மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் வங்கதேச அணி, 19.1 ஓவர்களில்...

News image

கேப்டன் மஹ்முதுல்லா

Updated On :8 செப்டம்பர் 2021, 1:21 pm

நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை வங்கதேச அணி வென்றுள்ளது.

வங்கதேசத்துக்குச் சுற்றுப்பயணம் செய்து 5 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது நியூசிலாந்து அணி. முதல் 3 ஆட்டங்களின் முடிவில் வங்கதேச அணி 2-1 என முன்னிலை வகித்தது. 4-வது டி20 ஆட்டம் டாக்காவில் நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

பேட்டிங்குக்குக் கடினமான ஆடுகளத்தில் நியூசிலாந்து அணி 19.3 ஓவர்களில் 93 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. வில் யங் அதிகபட்சமாக 46 ரன்கள் எடுத்தார். நசும் அகமது, முஸ்தாபிசுர் ரஹ்மான் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். 

மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் வங்கதேச அணி, 19.1 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 96 ரன்கள் எடுத்து 4-வது டி20 ஆட்டத்தில் வெற்றி பெற்று டி20 தொடரையும் கைப்பற்றியுள்ளது. கேப்டன் மஹ்முதுல்லா 43 ரன்கள் எடுத்துக் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 

வங்கதேச அணி டி20 தொடரில் 3-1 என முன்னிலை வகிக்கிறது. 5-வது டி20 ஆட்டம் செப்டம்பர் 10 அன்று நடைபெறுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.