தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

2022-ல் இங்கிலாந்து செல்லும் இந்திய அணி: ஒருநாள், டி20 தொடர்களின் அட்டவணை வெளியீடு

இந்திய அணியின் சுற்றுப்பயணம் ஜூலை 1-ல் டி20 தொடருடன் தொடங்கி, ஜூலை 14 அன்று ஒருநாள் தொடருடன் முடிவடைகிறது. 

News image
Updated On :8 செப்டம்பர் 2021, 10:04 am

DIN

2022-ல் இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்து மூன்று ஒருநாள், மூன்று டி20 ஆட்டங்களில் இந்திய அணி விளையாடவுள்ளது. இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

2022-ம்  ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறவுள்ள கிரிக்கெட் போட்டிகளின் அட்டவணையை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. இந்தியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்கின்றன. நியூசிலாந்து அணி மூன்று ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் தென்னாப்பிரிக்கா மூன்று டெஸ்டுகள், மூன்று ஒருநாள், மூன்று டி20 ஆட்டங்களிலும் இந்திய அணி மூன்று ஒருநாள், மூன்று டி20 ஆட்டங்களிலும் விளையாடுகின்றன.

நியூசிலாந்து டெஸ்ட் தொடர் ஜூன் 2-ல் தொடங்கி ஜூன் 27-ல் முடிவடைகிறது. தென் ஆப்பிரிக்கச் சுற்றுப்பயணம் ஒருநாள் தொடருடன் ஜூலை 19-ல் தொடங்கி டெஸ்ட் தொடருடன் செப்டம்பர் 12-ல் முடிவடைகிறது.

இந்திய அணியின் சுற்றுப்பயணம் ஜூலை 1-ல் டி20 தொடருடன் தொடங்கி, ஜூலை 14 அன்று ஒருநாள் தொடருடன் முடிவடைகிறது. 

இந்திய அணியின் இங்கிலாந்துச் சுற்றுப்பயணம்: 2022-ம் வருடம்

டி20 தொடர்

முதல் டி20 - ஜூலை 1, மான்செஸ்டர்
2-வது டி20 - ஜூலை 3, நாட்டிங்கம்
3-வது டி20 - ஜூலை 6, செளதாம்ப்டன்

ஒருநாள் தொடர்

முதல் ஒருநாள் - ஜூலை 9, பிர்மிங்ஹம்
2-வது ஒருநாள் - ஜூலை 12, லண்டன் ஓவல்
3-வது ஒருநாள் - ஜூலை 14, லண்டன் லார்ட்ஸ்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.