ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

டி20 உலகக் கோப்பைக்கான தெ.ஆ. அணி அறிவிப்பு: மூன்று பிரபல வீரர்களுக்கு இடமில்லை!

டி20 உலகக் கோப்பைப் போட்டியில் விளையாடவுள்ள தென்னாப்பிரிக்க அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

News image
Updated On :9 செப்டம்பர் 2021, 12:52 pm

DIN

டி20 உலகக் கோப்பைப் போட்டியில் விளையாடவுள்ள தென்னாப்பிரிக்க அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

டி20 உலகக் கோப்பை - ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை நடைபெறுகிறது. துபை, அபு தாபி, ஷார்ஜா, ஓமன் என நான்கு பகுதிகளில் டி20 உலகக் கோப்பை நடைபெறவுள்ளது. இந்தியாவில் நடத்தப்படவிருந்த டி20 உலகக் கோப்பை போட்டி, கரோனா சூழல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்போட்டியில் விளையாடவுள்ள தென்னாப்பிரிக்க அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. பவுமா தலைமையிலான அணியில் பிரபல வீரர்களான டு பிளெஸ்சிஸ், இம்ரான் தாஹிர், கிறிஸ் மாரிஸ் ஆகியோருக்கு அணியில் இடமளிக்கப்படவில்லை. கடந்த டிசம்பரிலிருந்து வெள்ளைப் பந்து கிரிக்கெட் ஆட்டங்களில் டு பிளெஸ்சிஸ் விளையாடவில்லை. 2019 உலகக் கோப்பையுடன் ஒருநாள் போட்டியிலிருந்து தாஹிர் ஓய்வு பெற்றார். கிறிஸ் மாரிஸ் கடந்த இரண்டு வருடங்களாக தெ.ஆ. அணியில் விளையாடவில்லை. உலகக் கோப்பைக்கான தெ. ஆ. அணியில் ஷம்சி உள்பட மூன்று சுழற்பந்து வீச்சாளர்கள் இடம்பெற்றுள்ளார்கள்.

தென்னாப்பிரிக்க அணி: பவுமா (கேப்டன்), டி காக், மார்க்ரம், டேவிட் மில்லர், ரபாடா, ஷம்சி, பியான் ஃபோர்டைன், வியான் முல்டர், வாண் டர் டுசென், ஹெண்ட்ரிக்ஸ், என்கிடி, கிளாசென், அன்ரிச் நார்கியா, கேசவ் மஹாராஜ், பிரெடோரியஸ்.

மாற்று வீரர்கள்: ஜார்ஜ் லிண்டே, பெலுக்வாயோ, லிஸாட் வில்லியம்ஸ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.