அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

ஆஸி. அணிக்கு தொடர்ச்சியாக 25-வது வெற்றி: முதல் ஒருநாள் ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி படுதோல்வி

ஒருநாள் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய மகளிர் அணி தொடர்ச்சியாக 25 வெற்றிகளைப் பெற்று...

News image

அலிஸ்ஸா ஹீலி (கோப்புப் படம்)

Updated On :21 செப்டம்பர் 2021, 11:56 am

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணி தோல்வியடைந்துள்ளது.

ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து மூன்று ஒருநாள், மூன்று டி20, ஒரு டெஸ்ட் என மூன்று தொடர்களில் பங்கேற்கிறது இந்திய மகளிர் அணி.

முதல் ஒருநாள் ஆட்டம் மெக்கேவில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸி. அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் செய்த மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய மகளிர் அணி, 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 225 ரன்கள் எடுத்தது. கேப்டன் மிதாலி ராஜ் 63 ரன்கள் எடுத்தார். ஷஃபாலி வர்மா 8 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷ் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 32 ரன்கள் எடுத்தார்.  டார்சி பிரெளன் சிறப்பாகப் பந்துவீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதன்பிறகு பேட்டிங் செய்த ஆஸி. அணி, சிறப்பாக விளையாடி 41 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 227 ரன்கள் எடுத்து முதல் ஒருநாள் ஆட்டத்தை எளிதாக வென்றது. தொடக்க வீராங்கனை 93 ரன்களும் கேப்டன் மேக் லேனிங் 53 ரன்களும் எடுத்துக் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். தொடக்க வீராங்கனை அலிஸ்ஸா ஹீலி 77 ரன்கள் எடுத்தார். 

ஒருநாள் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய மகளிர் அணி தொடர்ச்சியாக 25 வெற்றிகளைப் பெற்று சாதனை படைத்துள்ளது. 2018 மார்ச் 12 முதல் விளையாடிய அனைத்து ஒருநாள் ஆட்டங்களிலும் அந்த அணி வெற்றி பெற்று, மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தும் அணியாக உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.