இத்தாலி கிரிக்கெட் அணியில் இடம்பெற்ற இங்கிலாந்து வீரர்
24 ஒருநாள், 34 டி20 சர்வதேச ஆட்டங்களில் விளையாடியவர்...


இங்கிலாந்தைச் சேர்ந்த ஜேட் டெர்ன்பாக், 24 ஒருநாள், 34 டி20 சர்வதேச ஆட்டங்களில் விளையாடியவர்.
இலங்கைக்கு எதிராக 2011-ல் சர்வதேச கிரிக்கெட்டு அறிமுகமான டெர்ன்பாக், கடைசியாக 2014-ல் விளையாடினார்.
இந்நிலையில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை தகுதிச்சுற்றுப் போட்டிக்கான இத்தாலி அணியில் ஜேட் டெர்ன்பாக் இடம்பிடித்துள்ளார்.
தென் ஆப்பிரிக்காவில் பிறந்து இங்கிலாந்து அணிக்காக 58 சர்வதேச ஆட்டங்களில் விளையாடிய வேகப்பந்து வீச்சாளரான டெர்ன்பாக்கின் தாய்க்கு இத்தாலியுடன் பிணைப்பு உள்ளதால் அதன் அடிப்படையில் இத்தாலியுடன் விளையாடத் தகுதி பெற்றுள்ளார். இங்கிலாந்து கவுன்டி கிரிக்கெட்டில் அவருக்கான வாய்ப்புகள் குறைந்துள்ளதால் இந்தப் பருவத்துடன் சர்ரே அணியிலிருந்து விலகவுள்ளார். பிறகு இத்தாலி அணியில் இடம்பெற்று சர்வதேச கிரிக்கெட்டில் மீண்டும் விளையாடவுள்ளார்.
2022 டி20 உலகக் கோப்பைக்கான தகுதிச்சுற்று அக்டோபர் 15-21 தேதிகளில் ஸ்பெயினில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் டி20 உலகக் கோப்பைக்கான உலக அளவிலான தகுதிச்சுற்றுப்போட்டியில் பங்கேற்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...