ஹேசில்வுட் அசத்தல் பந்துவீச்சு: 131 ரன்களுக்கு கட்டுப்பட்டது வங்கதேசம்

ஆஸ்திரேலியாவுடனான முதல் டி20 ஆட்டத்தில் முதலில் பேட் செய்த வங்கதேசம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்தது.
ஹேசில்வுட் அசத்தல் பந்துவீச்சு: 131 ரன்களுக்கு கட்டுப்பட்டது வங்கதேசம்


ஆஸ்திரேலியாவுடனான முதல் டி20 ஆட்டத்தில் முதலில் பேட் செய்த வங்கதேசம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்தது.

வங்கதேசம், ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான முதல் டி20 ஆட்டம் டாக்காவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் மேத்யூ வேட் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

ஆஸ்திரேலியாவின் சிறப்பான பந்துவீச்சால் வங்கதேச பேட்ஸ்மேன்களால் துரிதமாக ரன் சேர்க்க முடியவில்லை. சோமியா சர்கார் முதல் விக்கெட்டாக 2 ரன்களுக்கு ஜோஷ் ஹேசில்வுட் வேகத்தில் வீழ்ந்தார்.

இதன்பிறகு வீரர்கள் ஓரளவு ரன் சேர்த்தாலும், ஆட்டத்தில் அதிரடி இல்லை. முகமது நயிம் 30 (29 பந்துகள்), ஷகிப் அல் ஹசன் 36 (33), மகமதுல்லா 20 (20) எடுத்து ஆட்டமிழக்க அந்த அணி 17-வது ஓவரில்தான் 100 ரன்களையே எட்டியது.

கடைசி கட்டத்தில் ஆபிப் ஹோசைன் மட்டும் சற்று அதிரடி காட்ட ஸ்கோர் உயர்ந்தது. இன்னிங்ஸின் கடைசி பந்தில் ஆட்டமிழந்த ஹோசைன் 17 பந்துகளில் 23 ரன்கள் எடுத்தார்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அந்த அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்தது.

ஆஸ்திரேலியா தரப்பில் ஹேசில்வுட் 3 விக்கெட்டுகளையும், மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட்டுகளையும், ஆடம் ஸாம்பா மற்றும் ஆண்ட்ரூ டை தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com