ஜோ ரூட் அரைசதம்: 2-வது இன்னிங்ஸில் முன்னிலைப் பெற்றது இங்கிலாந்து

இந்தியாவுடனான முதல் டெஸ்ட் ஆட்டத்தின் இரண்டாவது இன்னிங்ஸில் ஜோ ரூட்டின் அரைசதத்தால் இங்கிலாந்து முன்னிலைப் பெற்றுள்ளது.
ஜோ ரூட் அரைசதம்: 2-வது இன்னிங்ஸில் முன்னிலைப் பெற்றது இங்கிலாந்து

இந்தியாவுடனான முதல் டெஸ்ட் ஆட்டத்தின் இரண்டாவது இன்னிங்ஸில் ஜோ ரூட்டின் அரைசதத்தால் இங்கிலாந்து முன்னிலைப் பெற்றுள்ளது.

இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் ஆட்டம் டிரென்ட் பிரிட்ஜில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 183 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

தொடர்ந்து, முதல் இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி 278 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இதையடுத்து, 95 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை ஆடத் தொடங்கியது இங்கிலாந்து. மழையால் 3-வது நாள் ஆட்டம் ஆட்டம் தடைபட்டது. ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து விக்கெட் இழப்பின்றி 25 ரன்கள் எடுத்திருந்தது.

இந்த நிலையில், 4-ம் நாள் ஆட்டத்தை ரோரி பர்ன்ஸ் மற்றும் டொமினிக் சிப்லே தொடங்கினர். ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே பர்ன்ஸ் (18) விக்கெட்டை முகமது சிராஜ் வீழ்த்தினார். அடுத்த ஓவரில் புதிதாகக் களமிறங்கிய ஸாக் கிராலே (6) விக்கெட்டை ஜாஸ்பிரீத் பூம்ரா வீழ்த்தினார்.

இதைத் தொடர்ந்து, களமிறங்கிய கேப்டன் ஜோ ரூட் சிப்லேவுடன் இணைந்து பாட்னர்ஷிப் அமைத்தார். சிப்லே நிதானம் காட்ட ரூட் துரிதமாக ரன் சேர்த்தார்.

ரூட் 68-வது பந்திலேயே அரைசதத்தை எட்டினார். 

4-ம் நாள் உணவு இடைவேளையில் இங்கிலாந்து 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 119 ரன்கள் எடுத்து 24 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.

ரூட் 54 ரன்களுடனும், சிப்லே 27 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com