நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

ஆண்டர்சனின் மேஜிக்கால் சதத்தை நழுவவிட்ட ரோஹித் (விடியோ)

இங்கிலாந்துடனான 2-வது டெஸ்ட் ஆட்டத்தில் இந்திய பேட்ஸ்மேன் ரோஹித் சர்மா 83 ரன்களுக்கு ஜேம்ஸ் ஆண்டர்சனின் மேஜிக் பந்தால் போல்டானார்.

News image
Updated On :12 ஆகஸ்ட் 2021, 4:15 pm

DIN


இங்கிலாந்துடனான 2-வது டெஸ்ட் ஆட்டத்தில் இந்திய பேட்ஸ்மேன் ரோஹித் சர்மா 83 ரன்களுக்கு ஜேம்ஸ் ஆண்டர்சனின் மேஜிக் பந்தால் போல்டானார்.

இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கிடையிலான 2-வது டெஸ்ட் ஆட்டம் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கிய ரோஹித் சர்மா மற்றும் கேஎல் ராகுல் இந்த முறையும் இந்தியாவுக்குப் பிரமாதமான தொடக்கத்தைத் தந்தனர். ராகுல் நிதானம் காட்ட, ரோஹித் அவ்வப்போது பவுண்டரிகள் அடித்து ரன்களை உயர்த்தி வந்தார். இதன்மூலம், இந்த இணை முதல் விக்கெட்டுக்கு 100 ரன்களைக் கடந்தது.

Story image

ரோஹித் சர்மாவே ரன் குவிப்பில் ஆதிக்கம் செலுத்தியதால், முதல் 100 ரன்களில் அவர் மட்டுமே 75 ரன்களை எடுத்திருந்தார்.

Story image

அந்நிய மண்ணில் முதல் டெஸ்ட் சதத்தை நோக்கி விளையாடி வந்த ரோஹித் சர்மா 83 ரன்கள் எடுத்திருந்தபோது ஆண்டர்சனின் சிறப்பான பந்தால் எதிர்பாராத விதமாக போல்டானார்.

சற்று முன்பு வரை இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. ராகுல் 74 ரன்களுடனும், கேப்டன் விராட் கோலி 7 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.