2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

இந்தியாவை திணறடிக்கும் ஜோ ரூட்: 300-ஐத் தாண்டியது இங்கிலாந்து

​இந்தியாவுடனான 2-வது டெஸ்ட் ஆட்டத்தின் 3-வது நாள் தேநீர் இடைவேளையில் இங்கிலாந்து 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 314 ரன்கள் எடுத்துள்ளது.

News image
Updated On :14 ஆகஸ்ட் 2021, 3:09 pm

DIN


இந்தியாவுடனான 2-வது டெஸ்ட் ஆட்டத்தின் 3-வது நாள் தேநீர் இடைவேளையில் இங்கிலாந்து 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 314 ரன்கள் எடுத்துள்ளது.

இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கிடையிலான 2-வது டெஸ்ட் ஆட்டம் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 364 ரன்கள் எடுத்தது.

தொடர்ந்து, முதல் இன்னிங்ஸை ஆடத் தொடங்கிய இங்கிலாந்து 3-ம் நாள் உணவு இடைவேளையின்போது73 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 216 ரன்கள் எடுத்திருந்தது. ஜோ ரூட் 89, ஜானி பேர்ஸ்டோவ் 51 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இதைத் தொடர்ந்து, ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே பேர்ஸ்டோவ் 57 ரன்களுக்கு முகமது சிராஜ் பந்தில் ஆட்டமிழந்தார். எனினும், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ரூட் டெஸ்ட் கிரிக்கெட்டில் 22-வது சதத்தைப் பூர்த்தி செய்தார்.

அவருக்கு ஒத்துழைப்பு தருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஜாஸ் பட்லர் 23 ரன்கள் எடுத்த நிலையில் இஷாந்த் சர்மா பந்தில் போல்டானார். 

ஆனால், அடுத்து களமிறங்கிய மொயீன் அலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரூட்டுடன் பாட்னர்ஷிப் அமைத்தார். இந்த இணை 3-ம் நாள் தேநீர் இடைவேளை வரை மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்துக்கொண்டது. இதனால், அணியின் ஸ்கோரும் 300-ஐத் தாண்டியது.

தேநீர் இடைவேளையில் இங்கிலாந்து 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 314 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. ரூட் 132 ரன்களுடனும், மொயீன் அலி 20 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து இன்னும் 50 ரன்கள் மட்டுமே பின்தங்கியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.