புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

நீரஜ் சோப்ராவுக்குக் கடுமையான காய்ச்சல், தொண்டை வலி!

காய்ச்சல் குறையவும் இல்லை. ஆனால் பரிசோதனையில் அவருக்கு கரோனா இல்லை என்று,,,

News image
Updated On :14 ஆகஸ்ட் 2021, 10:22 am

ANI

ஒலிம்பிக்ஸில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ரா கடுமையான காய்ச்சல் காரணமாக மருத்துவ சிகிச்சை மேற்கொண்டுள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தடகளப் பிரிவில் இந்திய ஈட்டி எறிதல் வீரா் நீரஜ் சோப்ரா (23) தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்தாா். இறுதிச்சுற்றில் அவா் 87.58 மீட்டா் தூரம் எறிந்து முதலிடம் பிடித்தாா். நீரஜ் சோப்ரா தங்கம் வென்ற ஆகஸ்ட் 7-ம் தேதியை, தேசிய ஈட்டி எறிதல் தினமாக இந்திய தடகள சம்மேளனம் அறிவித்தது.

இந்நிலையில் கடுமையான காய்ச்சல், தொண்டை வலியால் அவதிப்பட்டு வருகிறார். நீரஜ் சோப்ரா. இதன் காரணமாக அவர் மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். நீரஜுக்குக் கடுமையான காய்ச்சல். தொண்டை வலி. காய்ச்சல் குறையவும் இல்லை. ஆனால் பரிசோதனையில் அவருக்கு கரோனா இல்லை என்று தெரிய வந்துள்ளது. தற்போது அவர் ஓய்வெடுத்து வருகிறார் என்று நீரஜ் தரப்பிலிருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.