பும்ராவை உசுப்பேற்றிய இங்கிலாந்து பந்துவீச்சாளர்: லார்ட்ஸ் டெஸ்டில் பரபரப்பு

பும்ராவும் ஷமியும் வழக்கத்துக்கு மாறாக பேட்டிங்கில் அதிகக் கவனம் செலுத்தி இந்திய அணி 200 ரன்கள் முன்னிலை பெற உதவினார்கள்...
பும்ராவை உசுப்பேற்றிய இங்கிலாந்து பந்துவீச்சாளர்: லார்ட்ஸ் டெஸ்டில் பரபரப்பு

இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸில் ஆண்டர்சன் பேட்டிங் செய்தபோது பவுன்சர்கள் வீசி நிலைதடுமாற வைத்தார் பும்ரா.

அதை மனத்தில் வைத்துக்கொண்டு இங்கிலாந்து அணியினர் பும்ராவை இன்று உசுப்பேற்றியுள்ளார்கள். இதனால் கோபமடைந்த பும்ராவும் ஷமியும் வழக்கத்துக்கு மாறாக பேட்டிங்கில் அதிகக் கவனம் செலுத்தி இந்திய அணி 200 ரன்கள் முன்னிலை பெற உதவினார்கள்.

இந்தியா - இங்கிலாந்துக்கு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் டிரா ஆன நிலையில், லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் 2-வது டெஸ்ட் நடைபெற்று வருகிறது. இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 364 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்து அணி, முதல் இன்னிங்ஸில் 391 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 4-ம் நாளில் இங்கிலாந்து அணி சிறப்பாகப் பந்துவீசியது. 

4-ம் நாள் முடிவில் இந்திய அணி, 82 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்தது.  ரிஷப் பந்த் 14, இஷாந்த் சர்மா 4 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். 

5-ம் நாளான இன்று, ஆண்டர்சன் ஓவரில் ரிஷப் பந்த் ஒரு பவுண்டரி அடித்தார். பிறகு அதே ஓவரில் இஷாந்த் சர்மாவும் ஒரு பவுண்டரி அடிக்க இந்திய ரசிகர்கள் குஷியானார்கள். ஆனால் ரிஷப் பந்த் 22 ரன்களிலும் இஷாந்த் சர்மா 16 ரன்களிலும் ஆலி ராபின்சன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்கள். இதன்பிறகு பும்ராவும் ஷமியும் கூட்டணி சேர்ந்தார்கள்.

முதல் இன்னிங்ஸில் ஆண்டர்சனுக்கு பும்ரா பவுன்சர் வீசியதை மனத்தில் வைத்துக்கொண்டு அதேபோல பவுன்சர் பந்துகளை வீசி நெருக்கடி கொடுத்தார்கள் இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள். பும்ராவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள். பும்ரா நடுவரிடம் முறையிட்டார். இதனால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. வுட் வீசிய பவுன்சர் பந்து பும்ராவின் ஹெல்மெட்டில் பட்டது. இந்தச் சூழலால் பேட்டிங்கில் அதிகக் கவனம் செலுத்தி முக்கியமான ரன்களைச் சேர்த்தார்கள் பும்ராவும் ஷமியும். இதனால் இந்திய அணி 200 ரன்கள் முன்னிலை பெற்றது. விக்கெட்டுகள் எடுப்பதில் கவனம் செலுத்துவதை விட பும்ராவை வெறுப்பேற்றுவதில் இங்கிலாந்து வீரர்கள் ஆர்வம் செலுத்தியதால் அதற்கான விளைவுகளைச் சந்தித்தார்கள்.

இந்திய அணி 100 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 250 ரன்கள் எடுத்துள்ளது. பும்ரா 21, ஷமி 27 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். இந்திய அணி 223 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com