ராஜஸ்தான் ராயல்ஸில் பட்லரும் இல்லை: இன்னும் எத்தனை வீரர்களை இழக்கப் போகிறது?
By DIN | Published On : 21st August 2021 09:01 PM | Last Updated : 21st August 2021 09:01 PM | அ+அ அ- |

கோப்புப்படம்
ஐபிஎல் 14-ம் சீசனின் இரண்டாம் பகுதியிலிருந்து ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் ஜாஸ் பட்லர் விலகியுள்ளார்.
ஐபிஎல் 14-ம் சீசனின் முதல் பாதி இந்தியாவில் நடைபெற்றது. கரோனா பாதிப்பு அச்சுறுத்தல் காரணமாக பாதியிலேயே தடைபட்டது. இதன் இரண்டாம் பகுதி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது.
இந்த நிலையில், ஜாஸ் பட்லர் தம்பதி இரண்டாவது குழந்தையை எதிர்நோக்கி இருப்பதால் இரண்டாம் பகுதி ஐபிஎல் போட்டிகளிலிருந்து அவர் விலகியுள்ளார். அவருக்குப் பதில் மாற்று வீரராக நியூசிலாந்து விக்கெட் கீப்பர் கிளென் பிலிப்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதையும் படிக்க | ஆர்சிபியில் அதிரடி மாற்றங்கள்: பயிற்சியாளர் மாற்றம்; புதிய வீரர்கள் தேர்வு
ஏற்கெனவே இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் காயம் காரணமாக பங்கேற்க முடியாத சூழல் உள்ளது. முக்கிய ஆல்-ரௌண்டர் பென் ஸ்டோக்ஸ் கிரிக்கெட்டிலிருந்து காலவரையற்ற இடைவெளி எடுத்துக்கொள்வதாக அறிவித்து சர்வதேச போட்டிகளில் பங்கேற்காமல் உள்ளார். இந்த வரிசையில் தற்போது அணியின் மற்றுமொரு முக்கிய வீரர் பட்லரும் விலகியிருப்பது ராஜஸ்தான் ராயல்ஸுக்கு மிகப் பெரிய இழப்பாக அமைந்துள்ளது.