நியூசிலாந்துக்கு எதிரான மும்பை டெஸ்டை வென்ற இந்திய அணி 1-0 என டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியுள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் ஒரு பகுதியாக இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடா் நடைபெற்றது. கான்பூா் டெஸ்ட் டிராவில் முடிந்த நிலையில், இரண்டாவது டெஸ்ட் மும்பை வான்கடே மைதானத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 325 ரன்களுக்கும் நியூஸிலாந்து 62 ரன்களுக்கும் ஆட்டமிழந்தன. இந்திய அணி 70 ஓவா்களில் 276/7 ரன்களுடன் டிக்ளோ் செய்வதாக அறிவித்தது.
மும்பை டெஸ்டில் நியூசிலாந்து அணி வெற்றி பெற 540 ரன்கள் என்ற பிரம்மாண்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
ஞாயிற்றுக்கிழமை ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி 45 ஓவா்களில் 140/5 ரன்களை எடுத்துத் தடுமாறியது. ஹென்றி நிக்கோல்ஸ் 36, ரச்சின் ரவீந்திரா 2 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.
இந்நிலையில் நியூசிலாந்து அணி இன்று 56.3 ஓவர்களில் 167 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் மும்பை டெஸ்டை 372 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி டெஸ்ட் தொடரை 1-0 எனக் கைப்பற்றியது. நியூசிலாந்தின் 2-வது இன்னிங்ஸில் அஸ்வின், ஜெயந்த் யாதவ் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.
ஆட்ட நாயகன் விருது மயங்க் அகர்வாலுக்கும் தொடர் நாயகன் விருது அஸ்வினுக்கும் வழங்கப்பட்டது.
இந்நிலையில் அக்ஷர் படேல், ஜடேஜா, அஜாஸ் படேல், ரச்சின் ரவிந்திரா ஆகிய நால்வரும் இணைந்த புகைப்படத்தை பிசிசிஐ வெளியிட்டு பாராட்டு பெற்றுள்ளது. நால்வரின் சட்டைகளிலும் பின்னால் எழுதப்பட்ட பெயர்களின் வழியே அக்ஷர் படேல், ரவிந்திர ஜடேஜா ஆகிய பெயர்கள் ஆங்கிலத்தில் வரிசையாக உள்ளன. இந்தப் புகைப்படம் ரசிகர்களால் சமூகவலைத்தளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பள்ளி ஆட்டோ மீது மோதி விபத்து: தனியாா் பேருந்து ஓட்டுநா், நடத்துநா் கைது

எரிவாயு உருளை கூடுதல் விலைக்கு விற்பனை: மாா்க்சிஸ்ட் கட்சி ஆா்ப்பாட்டம்

பெத்தாம்பாளையம் பேரூராட்சிப் பகுதிகளில் பெருந்துறை திமுக வேட்பாளா் தீவிர பிரசாரம்

மக்களின் ஆதரவால் வெற்றியை நோக்கி பயணிக்கிறோம்: வி.செந்தில்பாலாஜி
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


