ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்டிலிருந்து ஜேம்ஸ் ஆண்டர்சன் விலகல்: காரணம் என்ன?

ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்டிலிருந்து ஜேம்ஸ் ஆண்டர்சன் விலகல்: காரணம் என்ன?

ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்டிலிருந்து இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் விலகியுள்ளார்.
Published on

ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்டிலிருந்து இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் விலகியுள்ளார்.

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 ஆட்டங்களைக் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நாளை முதல் நடைபெறவுள்ளது. இரு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் ஆஷஸ் தொடர், இந்த வருடம் ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. நாளை (டிசம்பர் 8) ஆரம்பிக்கும் ஆஷஸ் தொடர், ஜனவரி 18 அன்று முடிவடைகிறது. மகளிர் ஆஷஸ் டெஸ்ட் கேன்பெராவில் ஜனவரி 27 அன்று தொடங்குகிறது. 

2019-ல் இங்கிலாந்தில் நடைபெற்ற ஆஷஸ் தொடர் 2-2 என சமனில் முடிந்தது. இதுவரை நடைபெற்ற 71 ஆஷஸ் தொடர்களில் 33-ல் ஆஸ்திரேலியாவும் 32-ல் இங்கிலாந்தும் வென்றுள்ளன. 6 தொடர்கள் சமனில் முடிந்துள்ளன. ஆஷஸ் தொடரில் நடைபெற்ற 335 டெஸ்டுகளில் 136-ல் ஆஸ்திரேலியாவும் 108-ல் இங்கிலாந்தும் வென்றுள்ளன. 91 டெஸ்டுகள் டிரா ஆகியுள்ளன. 2017-18 ஆஷஸ் தொடரை வென்று 2019 தொடரை சமன் செய்ததால் ஆஷஸ் கோப்பை ஆஸ்திரேலிய அணி வசம் உள்ளது.

இந்நிலையில் முதல் டெஸ்டிலிருந்து பிரபல இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் விலகியுள்ளார். 2-வது டெஸ்ட், அடிலெய்டில் பகலிரவு ஆட்டமாக நடைபெறவுள்ளது. அதில் கலந்துகொள்வதற்காக முதல் டெஸ்டில் இருந்து ஆண்டர்சன் விலகியுள்ளார். அவருக்குக் காயம் எதுவும் இல்லை. நல்ல உடற்தகுதியுடன் உள்ளார் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. 

39 வயது ஆண்டர்சனால் ஆஷஸ் தொடரின் 5 டெஸ்டுகளிலும் பங்கேற்க முடியாது என்பதால் அவருடைய வேலைப்பளுவைக் கருத்தில் கொண்டு இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

X
Dinamani
www.dinamani.com