துபையில் நடைபெற்றும் வரும் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் 8-வது ஆட்டத்தில் கார்ல்சன் வெற்றி பெற்று 2 புள்ளிகள் கூடுதலாக முன்னிலை பெற்றுள்ளார்.
நடப்பு உலக சாம்பியன் கார்ல்சன் - ரஷியாவைச் சேர்ந்த இயன் நிபோம்நிஷி ஆகியோருக்கிடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி துபையில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் வெல்லும் வீரர் உலக சாம்பியனாகப் பட்டம் சூட்டப்படுவார். கேண்டிடேட்ஸ் போட்டியை வென்றதன் மூலம் இப்போட்டியில் விளையாட இயன் நிபோம்நிஷி தகுதி பெற்றார்.
முதல் 5 ஆட்டங்களும் டிரா ஆன நிலையில் வெள்ளியன்று நடைபெற்ற 6-வது ஆட்டத்தில் 136 நகர்த்தலுக்குப் பிறகு கார்ல்சன் வெற்றி பெற்று முன்னிலை வகித்தார். உலக செஸ் சாம்பியன்ஷிப் வரலாற்றில் அதிக நகர்த்தல் கொண்ட ஆட்டம் அதுதான். 7 மணி நேரம் 45 நிமிடங்கள் வரை நீடித்த அந்த ஆட்டத்துக்கு செஸ் ரசிகர்கள் பாராட்டு தெரிவித்தார்கள். இதன்பிறகு கருப்பு நிற காய்களுடனும் விளையாடிய 7-வது ஆட்டத்தை கார்ல்சன் டிரா செய்தார்.
கார்ல்சன் - நிபோம்நிஷி இடையிலான 8-வது ஆட்டம் நேற்று நடைபெற்றது. கார்ல்சன் வெள்ளை நிற காய்களுடனும் நிபோம்நிஷி கருப்பு நிற காய்களுடனும் விளையாடினார்கள். 21-வது நகர்த்தலில் பெரிய தவறு செய்தார் நிபோம்நிஷி. இதன்பிறகு அவரால் அந்தத் தவறிலிருந்து மீளமுடியவில்லை. 46-வது நகர்த்தலில் 2-வது வெற்றியை அடைந்தார் கார்ல்சன்.
மொத்தம் 14 சுற்றுகள் கொண்ட இப்போட்டியில் இதுவரை கார்ல்சன் 5 புள்ளிகளும் நிபோம்நிஷி 3 புள்ளிகளும் எடுத்துள்ளார்கள். 2 புள்ளிகள் கூடுதலாகப் பெற்று முன்னிலை வகிப்பதால் உலக சாம்பினாக கார்ல்சன் மீண்டும் மகுடம் சூடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று, ஓய்வு நாளாகும். 9-வது ஆட்டம் நாளை நடைபெறவுள்ளது.
Related Article
மும்பை டெஸ்ட்: ரசிகர்களைக் கவர்ந்த நால்வர் புகைப்படம்
மேற்கிந்தியத் தீவுகள் ஒருநாள் அணிக்குப் புதிய கேப்டன்
முதல் கிரிக்கெட் வீரர்: விராட் கோலியின் புதிய சாதனை
தொடர் நாயகன் விருதை மீண்டும் வென்ற அஸ்வின்: சாதனைப் பட்டியலில் 2-வது இடம்!
1-0: நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றது இந்திய அணி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பள்ளி ஆட்டோ மீது மோதி விபத்து: தனியாா் பேருந்து ஓட்டுநா், நடத்துநா் கைது

எரிவாயு உருளை கூடுதல் விலைக்கு விற்பனை: மாா்க்சிஸ்ட் கட்சி ஆா்ப்பாட்டம்

பெத்தாம்பாளையம் பேரூராட்சிப் பகுதிகளில் பெருந்துறை திமுக வேட்பாளா் தீவிர பிரசாரம்

மக்களின் ஆதரவால் வெற்றியை நோக்கி பயணிக்கிறோம்: வி.செந்தில்பாலாஜி
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


