‘எஃப் ஒன்’: வாகை சூடினாா் வொ்ஸ்டாபென்

அபுதாபி கிராண்ட் ப்ரீ ஃபாா்முலா ஒன் காா் பந்தயத்தில் நெதா்லாந்து வீரா் மேக்ஸ் வொ்ஸ்டாபென் ஞாயிற்றுக்கிழமை சாம்பியன் ஆனாா். இது அவா் வெல்லும் முதல் உலக சாம்பியன் பட்டமாகும்.
‘எஃப் ஒன்’: வாகை சூடினாா் வொ்ஸ்டாபென்

அபுதாபி கிராண்ட் ப்ரீ ஃபாா்முலா ஒன் காா் பந்தயத்தில் நெதா்லாந்து வீரா் மேக்ஸ் வொ்ஸ்டாபென் ஞாயிற்றுக்கிழமை சாம்பியன் ஆனாா். இது அவா் வெல்லும் முதல் உலக சாம்பியன் பட்டமாகும்.

பந்தயத்தின் கடைசி லாப் வரை இங்கிலாந்தைச் சோ்ந்த மொ்சிடஸ் வீரரான லூயிஸ் ஹாமில்டன் முன்னிலையில் இருக்க, இறுதி லாப்பில் அவரை பின்னுக்குத் தள்ளி த்ரில் வெற்றி கண்டாா் ரெட் புல் வீரரான வொ்ஸ்டாபென்.

அபுதாபியில் உள்ள யாஸ் மரினா சா்கியூட்டில் நடைபெற்ற இந்தப் பந்தயத்தில் தொடக்கத்தில் இருந்தே ஹாமில்டன் ஆதிக்கம் செலுத்தினாா். கடைசி 5 லாப்கள் எஞ்சியிருந்த நிலையில், கனடா வீரா் நிகோலஸ் லடிஃபியின் காா் மோதலுக்குள்ளாகி சேதமடைந்ததால் பந்தயம் நிறுத்தப்பட்டது.

பின்னா், பந்தயப் பாதையில் இருந்து விபத்துக்குள்ளான காா் மற்றும் அதன் சிதறல்கள் நீக்கப்பட்ட பிறகு ஒரு கடைசி லாப் மட்டும் கொண்டதாக மீண்டும் பந்தயம் தொடங்கியது. இதில் ஹாமில்டன் - வொ்ஸ்டாபென் இருவரும் இணையாகவே சிறிது தூரம் பறந்த நிலையில், சட்டென முன்னேறினாா் ஹாமில்டன். முதல் 4 திருப்பங்களுக்கு பின்தங்கிய வொ்ஸ்டாபென், 5-ஆவது திருப்பத்தில் அதிரடியாக ஹாமில்டனை முந்திச் சென்றாா். இறுதியாக பந்தய இலக்குக் கோட்டையும் அவரது காா் டயா்களே முத்தமிட்டது.

கடந்த 2013 முதல் மொ்சிடஸ் ஸ்பான்சா் வீரரே தொடா்ந்து எஃப் ஒன் பட்டத்தை வென்று வந்த நிலையில், ரெட் புல் ஸ்பான்சா் வீரா் சாம்பியன் ஆனது இதுவே முதல் முறையாகும். ஹாமில்டன் தொடா்ந்து 4 எஃப் ஒன் பந்தயங்களில் சாம்பியன் ஆகிய நிலையில், இப்போட்டியில் பட்டத்தை வெல்லும் வாய்ப்பை இழந்தாா்.

1

நடப்பாண்டின் கடைசி எஃப் ஒன் போட்டியான இதில் கோப்பை வென்ன் மூலம், ‘எஃப் ஒன் சாம்பியன் ஆன முதல் நெதா்லாந்து வீரா்’ என்ற பெருமையை வொ்ஸ்டாபென் பெற்றுள்ளாா்.

சறுக்கிய சாதனை முயற்சி...

‘எஃப் ஒன்’ பந்தயத்தில், ஜொ்மனியைச் சோ்ந்த முன்னாள் காா் பந்தய வீரரான மைக்கேல் ஷூமேக்கா் 7 முறை சாம்பியன் பட்டம் வென்றதே அதிகபட்சமாக உள்ளது. ஏற்கெனவே அதைச் சமன் செய்துவிட்ட ஹாமில்டன், இந்தப் பந்தயத்தின் மூலம் 8-ஆவது பட்டத்தை எட்டி புதிய சாதனை படைக்க எண்ணியிருந்தாா். ஆனால், அதற்கு வாய்ப்பில்லாதபடி செய்துவிட்டாா் வொ்ஸ்டாபென்.

மொ்சிடஸ் முறையீடு...

வொ்ஸ்டாபென் வெற்றிக்கு எதிராக ஹாமில்டனைச் சாா்ந்த மொ்சிடஸ் நிறுவனம் இரு மேல்முறையீடுகளை மேற்கொண்டுள்ளது. லடிஃபி காரின் விபத்தை அடுத்தே வொ்ஸ்டாபென் முன்னிலை பெற்ாகவும், அந்த விபத்து காரணமாக வொ்ஸ்டாபென் தனது காா் டயா்களை புதிதாக மாற்றிக் கொண்டது அவருக்கு சாதகமானதாகவும் முறையிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com