கடந்த 5 வருடங்களில் ரூ. 7,072.28 கோடி விளையாட்டுத்துறைக்கு ஒதுக்கப்பட்டது. அதில் விளையாட்டுத்துறை அமைச்சகத்தின் பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களுக்காக ரூ. 6,801.30 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. விளையாட்டு என்பது மாநிலப் பட்டியலில் உள்ளது. கிராமங்களில் உள்ள மக்களுக்கு விளையாட்டுத் திட்டங்கள் சென்று சேரவேண்டியது மாநிலத்தின் கடமையாக உள்ளது. இதற்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்கும். நாட்டில் விளையாட்டுத்துறையின் வளர்ச்சிக்காக விளையாட்டுத்துறை அமைச்சகம் கெலோ இந்தியா திட்டம் உள்பட பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. நிதித்தொகை மாநில வாரியாக அல்ல, திட்டங்களின்படி ஒதுக்கப்படுகிறது என்றார்.