200 டெஸ்ட் விக்கெட்டுகள் எடுத்து முகமது ஷமி சாதனை

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 197 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 
200 டெஸ்ட் விக்கெட்டுகள் எடுத்து முகமது ஷமி சாதனை

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 197 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 

இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் 3 டெஸ்ட், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட், செஞ்சுரியனில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி, பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 105 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 327 ரன்கள் எடுத்தது. ராகுல் 123, மயங்க் அகர்வால் 60, ரஹானே 48 ரன்கள் எடுத்தார்கள். தெ.ஆ. தரப்பில் என்கிடி 6 விக்கெட்டுகளும் ரபாடா 3 விக்கெட்டுகளும் எடுத்தார்கள். 

இந்திய அணி சிறப்பாகப் பந்துவீசியதால் தெ.ஆ. அணி முதல் இன்னிங்ஸில் 62.3 ஓவர்களில் 197 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பவுமா 52 ரன்கள் எடுத்தார். இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஷமி 5 விக்கெட்டுகளும் பும்ரா, தாக்குர் தலா 2 விக்கெட்டுகளும் சிராஜ் 1 விக்கெட்டும் எடுத்தார்கள். 3-ம் நாள் முடிவில் இந்திய அணி 6 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 16 ரன்கள் எடுத்துள்ளது. ராகுல் 5, தாக்குர் 4 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். இந்திய அணி 9 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் 146 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. 

இந்த ஆட்டத்தின் மூலம் 200-வது டெஸ்ட் விக்கெட்டை எடுத்தார் ஷமி. இந்த இலக்கை எட்டிய 5-வது இந்திய வேகப்பந்துவீச்சாளர் என்கிற பெருமையைப் பெற்றார்.

அதிக டெஸ்ட் விக்கெட்டுகள் எடுத்த இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள்

கபில் தேவ் - 434 விக்கெட்டுகள்
ஜாகீர் கான் - 311 விக்கெட்டுகள்
இஷாந்த் சர்மா - 311 விக்கெட்டுகள்
ஸ்ரீநாத் - 236 விக்கெட்டுகள்
ஷமி - 200 விக்கெட்டுகள்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com