இந்தியாவில் டெஸ்ட் தொடரை வெல்லவேண்டும்: டேவிட் வார்னர் ஆசை

இந்தியாவில் டெஸ்ட் தொடரை வெல்ல வேண்டும் என ஆஸி. வீரர் டேவிட் வார்னர் தன்னுடைய விருப்பத்தைத் தெரிவித்துள்ளார். 
இந்தியாவில் டெஸ்ட் தொடரை வெல்லவேண்டும்: டேவிட் வார்னர் ஆசை
Published on
Updated on
1 min read

இந்தியாவில் டெஸ்ட் தொடரை வெல்ல வேண்டும் என ஆஸி. வீரர் டேவிட் வார்னர் தன்னுடைய விருப்பத்தைத் தெரிவித்துள்ளார். 

2021 ஐபிஎல் போட்டியில் 8 ஆட்டங்களில் 195 ரன்கள் மட்டுமே எடுத்தார் 35 வயது டேவிட் வார்னர். ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் 2021 போட்டி நடைபெற்றபோது கேப்டன் பதவியைப் பறிகொடுத்ததோடு அணியிலிருந்தும் நீக்கப்பட்டார். எனினும் டி20 உலகக் கோப்பையில் சிறப்பாக விளையாடி, தொடர் நாயகன் விருதை வென்றார். ஓய்வு பெறுவதற்கு முன்பு இரு ஆசைகள் உள்ளதாகத் தற்போது வார்னர் கூறியுள்ளார். ஆஷஸ் தொடரில் 3-0 என ஆஸ்திரேலிய அணி முன்னிலை பெற்று கோப்பையைத் தக்கவைத்துள்ள நிலையில் வார்னர் பேட்டியளித்ததாவது:

நாங்கள் இன்னும் இந்தியாவை அதன் சொந்த மண்ணில் தோற்கடிக்கவில்லை. அந்தச் சாதனையை நிகழ்த்தினால் நன்றாக இருக்கும். 2019-ல் இங்கிலாந்தில் நடைபெற்ற ஆஷஸ் தொடர் சமன் ஆனது. 2023-ல் அங்கு விளையாடி ஆஷஸ் தொடரையும் வெல்லவேண்டும். வயதான வீரர்களுக்கு முக்கிய உதாரணமாக உள்ளார் இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன். அவரைப் பார்த்து ஊக்கம் கொள்கிறோம். அடுத்ததாக பாகிஸ்தான், இலங்கைக்குச் சென்று டெஸ்ட் தொடர்களில் விளையாடுகிறோம். அதுதான் எங்கள் அணி மற்றும் இதன் குணத்தை வெளிப்படுத்துவதாக இருக்கும். இத்தொடர்களில் விளையாடி வெற்றி பெற ஆவலாக உள்ளோம் என்றார்.

இந்தியாவில் இதுவரை 8 டெஸ்டுகளில் விளையாடியுள்ள டேவிட் வார்னர், 3 அரை சதங்களுடன் 388 ரன்கள் எடுத்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com