இலங்கையின் பெரிய மைதானம் இந்திய பேட்ஸ்மேன்களுக்குச் சவாலாக உள்ளது: பந்துவீச்சுப் பயிற்சியாளர்

ஐபிஎல் போட்டியில் விளையாடும்போது குறைந்த அளவிலான பவுண்டரிகள் இருப்பதைப் பார்த்துள்ளோம்.
இலங்கையின் பெரிய மைதானம் இந்திய பேட்ஸ்மேன்களுக்குச் சவாலாக உள்ளது: பந்துவீச்சுப் பயிற்சியாளர்

இலங்கையின் கொழும்பு மைதானத்தின் அளவு பெரிதாக இருப்பது இந்திய பேட்ஸ்மேன்களுக்குச் சவாலாக உள்ளதாகப் பந்துவீச்சுப் பயிற்சியாளர் பராஸ் மாம்ப்ரே கூறியுள்ளார். 

இந்தியாவுக்கு எதிரான 2-ஆவது டி20 ஆட்டத்தில் இலங்கை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. இதையடுத்து 3 ஆட்டங்கள் கொண்ட தொடா் 1-1 என சமனில் உள்ளது. 

இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் அடித்தது. அடுத்து ஆடிய இலங்கை 19.4 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் அடித்து வென்றது. இந்த ஆட்டத்தின் மூலம் ஐபிஎல் வீரா்களான ருதுராஜ் கெய்க்வாட், தேவ்தத் படிக்கல், நிதீஷ் ராணா, சேத்தன் சக்காரியா ஆகியோா் இந்திய அணியில் இடம்பிடித்து சா்வதேச டி20 போட்டியில் அறிமுகம் ஆகினா். கிருணால் பாண்டியாவுக்கு கரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து, அவருக்கு நெருக்கமான தொடா்பில் இருந்ததாக சில வீரா்கள் தனிமைப்படுத்தப்பட்டதால், புதிய வீரா்களுக்கு வாய்ப்பு கிடைத்தது.

டி20 தோல்வி பற்றி இந்திய அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளர் பராஸ் மாம்ப்ரே கூறியதாவது:

இந்த மைதானத்தில் பவுண்டரி அடிப்பது எளிதல்ல என்பதால் பேட்ஸ்மேன்களுக்கும் சவாலாக உள்ளது. ஒரு ரன், இரண்டு ரன் என நிறைய ஓடி ரன் எடுக்கவேண்டும். பேட்ஸ்மேன்கள் சூழலுக்கு ஏற்றவாறு மாறுவது முக்கியம். இந்தியாவில் இதுபோல பெரிய மைதானங்களில் விளையாடி வீரர்களுக்குப் பழக்கமில்லை. ஐபிஎல் போட்டியில் விளையாடும்போது குறைந்த அளவிலான பவுண்டரிகள் இருப்பதைப் பார்த்துள்ளோம். நிறைய சிக்ஸர், பவுண்டரிகளை அடிக்க முடியும் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com