எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

பாகிஸ்தானுக்குச் சுற்றுப்பயணம் செய்யும் ஆஸ்திரேலிய அணி: அதிகாரபூர்வ அறிவிப்பு

2022-ம் வருடம் பாகிஸ்தானுக்குச் சென்று மூன்று டெஸ்டுகள், மூன்று ஒருநாள் ஆட்டங்கள் மற்றும் ஒரு டி20 ஆட்டத்தில் விளையாடுகிறது

News image
ஆஸி. அணி
Updated On :8 நவம்பர் 2021, 8:42 am

DIN

2022-ம் வருடம் பாகிஸ்தானுக்குச் சென்று மூன்று டெஸ்டுகள், மூன்று ஒருநாள் ஆட்டங்கள் மற்றும் ஒரு டி20 ஆட்டத்தில் விளையாடுகிறது ஆஸ்திரேலிய அணி. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.

டெஸ்ட் தொடர் மார்ச் 3 அன்று தொடங்கி மார்ச் 25-ல் முடிவடைகிறது. கராச்சி, ராவல்பிண்டி, லாகூரில் டெஸ்ட் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. ஒருநாள், டி20 தொடர்கள் லாகூரில் நடைபெறுகின்றன. மார்ச் 29-ல் தொடங்கும் ஒருநாள் தொடர், ஏப்ரல் 2-ல் முடிவடைகிறது. டி20 ஆட்டம் ஏப்ரல் 5-ல் நடைபெறுகிறது.

1998-க்குப் பிறகு பாகிஸ்தானுக்கு மீண்டும் சுற்றுப்பயணம் செய்கிறது ஆஸ்திரேலிய அணி. 24 வருடங்கள் கழித்து ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானுக்குச் செல்வதால் இந்தத் தொடர் குறித்து எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.