எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

ஐபிஎல் நட்சத்திரம் வெங்கடேஷ் ஐயர்: சையத் முஷ்டாக் அலி போட்டியில் எப்படி விளையாடுகிறார்?

ஐபிஎல் போட்டியில் மட்டுமல்லாமல் சையத் முஷ்டாக் அலி போட்டியிலும் நன்றாக விளையாடி அனைவர் கவனத்தையும் ஈர்த்துள்ளார்

News image
Updated On :8 நவம்பர் 2021, 9:49 am

DIN

ஐபிஎல் 2021 போட்டியின் நட்சத்திரமான வெங்கடேஷ் ஐயர், சையத் முஷ்டாக் அலி டி20 போட்டியிலும் தன் ஆல்ரவுண்டர் திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.

ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்காக விளையாடிய வெங்கடேஷ் ஐயர், 10 ஆட்டங்களில் 4 அரை சதங்களுடன் 370 ரன்கள் எடுத்தார். ஸ்டிரைக் ரேட் - 128.47. கிட்டத்தட்ட 9 ஓவர்கள் வீசி 3 விக்கெட்டுகளும் எடுத்தார். இதனால் ஆல்ரவுண்டராக இந்திய அணியில் விரைவில் இடம்பெறுவார் என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்தூரில் வசிக்கும் 26 வயது வெங்கடேஷ் ஐயர், தமிழ்க் குடும்பத்தைச் சேர்ந்தவர். 

இந்நிலையில் சையத் முஷ்டாக் அலி போட்டியிலும் சிறப்பாக விளையாடி வருகிறார் வெங்கடேஷ் ஐயர். 

இன்று தில்லியில் நடைபெற்ற பிஹாருக்கு எதிரான போட்டியில் மத்தியப் பிரதேச அணிக்காக விளையாடிய வெங்கடேஷ் ஐயர், 20 பந்துகளில் 36 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினார். பந்துவீச்சில் 4 ஓவர்கள் வீசி 2 ரன்கள் மட்டும் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

சையத் முஷ்டாக் அலி போட்டியில் வெங்கடேஷ் ஐயர்

37(23) & 1/13(2)
50*(41) & 2/20(3)
31(24) & 0/26(3)
36*(20) & 2/2(4)

ஐபிஎல் போட்டியில் மட்டுமல்லாமல் சையத் முஷ்டாக் அலி போட்டியிலும் நன்றாக விளையாடி அனைவர் கவனத்தையும் ஈர்த்துள்ளார் வெங்கடேஷ் ஐயர். ஐபிஎல் 2022 போட்டிக்காக நடைபெறும் மெகா ஏலத்தில் வெங்கடேஷ் ஐயருக்கு ரூ. 14 கோடி வரை கிடைக்க வாய்ப்புள்ளது என முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் சமீபத்தில் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.