வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! சர்வாதிகாரி பழனிசாமி இனி எந்தக் காலத்திலும் வெற்றி பெறமாட்டார்: ஓபிஎஸ் காட்டம்!அன்பானவர், பண்பானவர் ஓபிஎஸ்; திமுக கூட்டணியில் ஜனநாயக சக்திகள்! - மு.க. ஸ்டாலின்எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுக துணைப் பொதுச் செயலாளர் ஓபிஎஸ்? போடியில் மீண்டும் போட்டி? திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்! ஆடம்பரத்தைத் தவிர்த்திடுவீர்! பிறந்த நாளையொட்டி கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை! சட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனை
/

கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள முரளி விஜய் மறுப்பு?

கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள மறுப்பு தெரிவிப்பதால் சையத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டியில் முரளி விஜய் கலந்துகொள்ளவில்லை என...

News image
Updated On :28 ஜனவரி 2024, 4:34 am

DIN

கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள மறுப்பு தெரிவிப்பதால் சையத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டியில் முரளி விஜய் கலந்துகொள்ளவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.

சையத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டியில் தமிழக அணி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. இந்நிலையில் தமிழக அணியில் நட்சத்திர வீரர் முரளி விஜய் இடம்பெறாமல் இருப்பதற்கான காரணம் வெளியாகியுள்ளது.

சையத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் கரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும், போட்டி தொடங்குவதற்கு முன்பு ஒருவாரம் கரோனா தடுப்பு வளையத்தில் இருக்க வேண்டும் போன்ற விதிமுறைகளை பிசிசிஐ வகுத்துள்ளது. கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளவும் ஒரு வாரத்துக்கு முன்பு கரோனா தடுப்பு வளையத்தில் இருக்கவும் விருப்பம் இல்லாததால் சையத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டியில் முரளி விஜய்யால் பங்கேற்க முடியவில்லை என்கிற தகவல் ஊடகங்களில் வெளியாகியுள்ளது. எனினும் முரளி விஜய் தரப்பில் இதுகுறித்து விளக்கம் எதுவும் அளிக்கப்படவில்லை. 

கடந்த வருட ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணிக்காக விளையாடினார் முரளி விஜய். அதன்பிறகு அவர் வேறு எந்த கிரிக்கெட் போட்டியிலும் அவர் பங்கேற்கவில்லை. இந்த வருட டிஎன்பிஎல் போட்டியிலிருந்தும் விலகினார். தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் முதல் டிவிஷன் லீக் போட்டியிலும் அவர் விளையாடாததால் சையத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டிக்கு முரளி விஜய்யைத் தேர்வு செய்வதில் தமிழகத் தேர்வுக்குழுவினர் ஆர்வம் செலுத்தவில்லை எனத் தெரிகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.