இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் கோப்பை போட்டிகள்: ஐசிசி அறிவிப்பு

இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் கோப்பை போட்டிகள்: ஐசிசி அறிவிப்பு

2026 டி20 உலகக் கோப்பை, 2029 சாம்பியன்ஸ் கோப்பை, 2031 ஒருநாள் உலகக் கோப்பை ஆகிய போட்டிகள் இந்தியாவில் நடைபெறும்...
Published on

2026 டி20 உலகக் கோப்பை, 2029 சாம்பியன்ஸ் கோப்பை, 2031 ஒருநாள் உலகக் கோப்பை ஆகிய போட்டிகள் இந்தியாவில் நடைபெறும் என ஐசிசி அறிவித்துள்ளது.

2021 டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கு அடுத்ததாக 2022 டி20 உலகக் கோப்பைப் போட்டி ஆஸ்திரேலியாவிலும் 2023 ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டி இந்தியாவிலும் நடைபெறவுள்ளன.  இந்நிலையில் 2024-31 காலகட்டத்தில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கோப்பை, டி20 உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் கோப்பை போட்டிகள் குறித்த விவரங்களை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது.

2026 டி20 உலகக் கோப்பை, 2029 சாம்பியன்ஸ் கோப்பை, 2031 ஒருநாள் உலகக் கோப்பை ஆகிய போட்டிகள் இந்தியாவில் நடைபெறவுள்ளன. 2024-31 காலகட்டத்தில் 2 ஒருநாள் உலகக் கோப்பை, 4 டி20 உலகக் கோப்பை, 2 சாம்பியன்ஸ் கோப்பை போட்டிகள் நடைபெறவுள்ளன. அமெரிக்காவும் நமீபியாவும் முதல்முறையாக உலகக் கோப்பைப் போட்டிகளை நடத்தவுள்ளன. 

ஐசிசி ஆடவர் போட்டிகள்: 2024-31

2024 டி20 உலகக் கோப்பை: அமெரிக்கா, மே.இ. தீவுகள் 
2025 சாம்பியன்ஸ் கோப்பை: பாகிஸ்தான்
2026 டி20 உலகக் கோப்பை: இந்தியா, இலங்கை 
2027 ஒருநாள் உலகக் கோப்பை: தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே, நமீபியா 
2028 டி20 உலகக் கோப்பை: ஆஸ்திரேலியா, நியூசிலாந்து 
2029 சாம்பியன்ஸ் கோப்பை: இந்தியா 
2030 டி20 உலகக் கோப்பை: இங்கிலாந்து, அயர்லாந்து, ஸ்காட்லாந்து 
2031 ஒருநாள் உலகக் கோப்பை: இந்தியா, வங்கதேசம் 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com