டபிள்யூபிபிஎல் டி20 போட்டியில் அபார சதமடித்து இந்தியாவின் மந்தனா சாதனை

டபிள்யூபிபிஎல் போட்டியில் மந்தனா, ஹர்மன்ப்ரீத் கெளர் ஆகிய இருவருக்கும் அற்புதமான நாளாக இன்று அமைந்தது.
மந்தனா (கோப்புப் படம்)
மந்தனா (கோப்புப் படம்)


டபிள்யூபிபிஎல் டி20 போட்டியில் இந்தியாவின் மந்தனா சதமடித்து அசத்தியுள்ளார்.

மகளிர் பிக் பாஷ் லீக் போட்டியில் (டபிள்யூபிபிஎல்) மெல்போர்ன் - சிட்னி அணிகளுக்கிடையிலான ஆட்டத்தில் மெல்போர்ன் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

முதலில் விளையாடிய மெல்போர்ன் அணி, 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்தது. இந்தியாவின் ஹர்மன்ப்ரீத் கெளர், 55 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 11 பவுண்டரிகளுடன் 81 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 

கடினமான இலக்கை சிட்னி அணி நன்கு விரட்டியது. இந்திய வீராங்கனையான ஸ்மிருதி மந்தனா கடைசி வரை போராடினார். 57 பந்துகளில் சதமடித்து அணியினருக்கு நம்பிக்கையளித்தார். கடைசி ஓவரில் 6 பந்துகளில் 13 ரன்கள் தேவைப்பட்டன. இந்திய வீராங்கனை  ஹர்மன்ப்ரீத் கெளர் கடைசி ஓவரை வீசினார். அந்த ஓவரில் மந்தனா 4 பந்துகளை எதிர்கொண்டார். இருந்தும் ஒரு பவுண்டரி கூட கொடுக்காமல் அற்புதமாகப் பந்துவீசினார் ஹர்மன்ப்ரீத். கடைசி ஓவரில் சிட்னி அணி வீராங்கனைகளால் 8 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் பரபரப்பாக முடிந்த ஆட்டத்தில் மெல்போர்ன் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. 

மந்தனா 64 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 14 பவுண்டரிகளுடன் 114 ரன்கள் எடுத்துக் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து அனைவருடைய பாராட்டுகளையும் பெற்றுள்ளார். மகளிர் பிபிஎல் போட்டியில் அதிகபட்ச தனிநபர் ஸ்கோரை மந்தனா சமன் செய்துள்ளார். டபிள்யூபிபிஎல் போட்டியில் மந்தனா, ஹர்மன்ப்ரீத் கெளர் ஆகிய இருவருக்கும் அற்புதமான நாளாக இன்று அமைந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com