சையத் முஷ்டாக் அலி டி20: அரையிறுதியில் தமிழகத்துடன் மோதும் அணி எது?
By DIN | Published On : 19th November 2021 10:53 AM | Last Updated : 19th November 2021 10:53 AM | அ+அ அ- |

சையத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டியில் தமிழ்நாடு, ஹைதராபாத், கர்நாடகம், விதர்பா ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.
தமிழகம் தனது காலிறுதி ஆட்டத்தில் கேரளத்தை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியது. அரையிறுதியில் ஹைதராபாத்தைச் சந்திக்கிறது தமிழகம்.
தில்லியில் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் கேரளம் 20 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் அடித்தது. அடுத்து ஆடிய தமிழகம் 19.3 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் அடித்து வென்றது.
இதர காலிறுதி ஆட்டங்களில் கர்நாடகம் சூப்பா் ஓவரில் பெங்காலை வென்றது. ராஜஸ்தானை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சாய்த்தது விதா்பா. ஹைதராபாத் 30 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத்தை சாய்த்தது.
அரையிறுதி ஆட்டங்கள் தில்லியில் நாளை நடைபெறுகின்றன. இறுதி ஆட்டம் திங்கள் அன்று நடைபெறுகிறது. தமிழக அணி விளையாடும் ஆட்டம் காலை 8.30 மணிக்குத் தொடங்குகிறது. ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் நேரலையாக ஒளிபரப்பாகும்.
சையத் முஷ்டாக் அலி கோப்பை: அரையிறுதி ஆட்டங்கள்
தமிழ்நாடு vs ஹைதராபாத்
கர்நாடகம் vs விதர்பா