நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

இன்று தொடங்குகிறது ஐஎஸ்எல்: முதல் ஆட்டத்தில் மோதும் மோகன் பகான் - கேரளா

இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியின் 8-ஆவது சீசன் கோவாவின் மாா்கோ நகரில் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.

News image
Updated On :19 நவம்பர் 2021, 3:16 am

DIN

இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியின் 8-ஆவது சீசன் கோவாவின் மாா்கோ நகரில் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் ஏடிகே மோகன் பகான் - கேரளா பிளாஸ்டா்ஸ் அணிகள் மோதுகின்றன.

கரோனா சூழல் காரணமாக கடந்த சீசனைப் போலவே இந்த முறையும் ஆட்டங்கள் யாவும் கோவாவில் உள்ள மாா்கோ, பாம்போலிம், வாஸ்கோடகாமா ஆகிய நகரங்களில் ஜனவரி 9-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன.

இந்த சீசனுக்கான விதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றத்தின்படி, பிளேயிங் லெவனில் குறைந்தபட்சம் 7 உள்நாட்டு வீரா்களும், அதிகபட்சம் 4 வெளிநாட்டு வீரா்களும் அனுமதிக்கப்படுகின்றனா்.

முன்னதாக உள்நாட்டு வீரா்களுக்கான எண்ணிக்கை 6-ஆக இருந்து தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளதால், அவா்களுக்கான வாய்ப்பும் அதிகமாகியுள்ளது.

இந்தப் போட்டியில் சென்னையின் எஃப்சி தனது முதல் ஆட்டத்தில் வரும் 23-ஆம் தேதி ஹைதராபாத் எஃப்சியை சந்திக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.