ஒமைக்ரான் கரோனா பரவல் : தென்னாப்பிரிக்காவுக்கு உடனடியாகத் திரும்பும் பிளாண்டர்

புதிதாகக் கண்டறியப்பட்டுள்ள ஒமைக்ரான் வகை கரோனா பரவல் அச்சத்தால் தென்னாப்பிரிக்காவுக்கு உலகின் பல்வேறு நாடுகளும் பயணத் தடை விதித்துள்ள நிலையில்...
ஒமைக்ரான் கரோனா பரவல் : தென்னாப்பிரிக்காவுக்கு உடனடியாகத் திரும்பும் பிளாண்டர்

புதிதாகக் கண்டறியப்பட்டுள்ள ஒமைக்ரான் வகை கரோனா பரவல் அச்சத்தால் தென்னாப்பிரிக்காவுக்கு உலகின் பல்வேறு நாடுகளும் பயணத் தடை விதித்துள்ள நிலையில் பாகிஸ்தான் பந்துவீச்சு ஆலோசகர் வெர்னான் பிளாண்டர் சொந்த நாட்டுக்குத் திரும்ப முடிவெடுத்துள்ளார். 

தென்னாப்பிரிக்காவில் முதல்முறையாகக் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வகை கரோனா, அதுவரை அறியப்பட்ட மற்ற வகை கரோனாக்களைவிட அதிக வேகமாகப் பரவும் தன்மை கொண்டது என்று கூறப்படுவது உலகின் பல்வேறு நாடுகளிலும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, தென்னாப்பிரிக்கா மற்றும் அதன் அண்டை நாடுகளிலிருந்து பயணிகள் வருவதற்கும் அந்த நாடுகளுக்கு தங்கள் நாட்டிலிருந்து பயணிகள் செல்வதற்கும் உலக நாடுகள் அடுத்தடுத்து தடை விதித்துள்ளன. மேலும், தென்னாப்பிரிக்காவிலிருந்து பயணிகள் வருவதற்கு பல நாடுகள் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.

பாகிஸ்தானின் பந்துவீச்சு ஆலோசகராக தென்னாப்பிரிக்காவின் வெர்னான் பிளாண்டர் செயல்பட்டு வருகிறார். வங்கதேசத்துக்குச் சுற்றுப்பயணம் செய்துள்ள பாகிஸ்தான் அணி டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. வெர்னான் பிளாண்டரும் வங்கதேசத்துக்குச் சென்று பாகிஸ்தான் அணியினருடன் இணைந்து பணியாற்றுகிறார். 

மைக்ரான் வகை கரோனா பரவல் அச்சத்தால் தென்னாப்பிரிக்காவுக்கு உலகின் பல்வேறு நாடுகளும் பயணத் தடை விதித்துள்ள நிலையில் வங்கதேசத்திலிருந்து கிளம்பி சொந்த ஊருக்கு விரைவாகச் செல்ல முடிவெடுத்துள்ளார் பிளாண்டர். டெஸ்ட் தொடர் முடிவடைந்த பிறகு தென்னாப்பிரிக்காவுக்குத் திரும்புவதாக முதலில் பிளாண்டர் திட்டமிட்டிருந்தார். 

தன்னுடைய சொந்த நாட்டில் நிலவும் கரோனா சூழல் காரணமாக திங்கள் அன்று பிளாண்டர் தென்னாப்பிரிக்காவுக்குத் திரும்பவுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தகவல் அளித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com