வெளிநாட்டில் சொத்து: சச்சின் தரப்பு விளக்கம்

அரசுக்குத் தெரியப்படுத்தப்பட்டு முறையாக வரி செலுத்தப்பட்டதாக சச்சின் டெண்டுல்கர்...
வெளிநாட்டில் சொத்து: சச்சின் தரப்பு விளக்கம்

வெளிநாட்டில் முதலீடு செய்தது தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டுக்கு சச்சின் தரப்பு விளக்கம் அளித்துள்ளது. 

பல்வேறு ஊடக நிறுவனங்கள் அடங்கிய புலனாய்வு அமைப்பு, பண்டோரா பேப்பர்ஸ் என்கிற பெயரில் 91 நாடுகளைச் சேர்ந்த பிரபலங்களின் வெளிநாட்டுச் சொத்துக்கள் குறித்த ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவைச் சேர்ந்த சச்சின் டெண்டுல்கர், அனில் அம்பானி உள்ளிட்ட 380 பிரபலங்கள் வெளிநாடுகளில் முதலீடு செய்து சொத்துக்களை வாங்கியுள்ளதாக அந்த அமைப்பின் அறிக்கை கூறுகிறது. இந்தப் பட்டியலில் உள்ள பலரும் வெளிப்படையான முறையில் வெளிநாடுகளில் சொத்துகளை வாங்கியிருப்பதாகக் கூறியுள்ளார்கள். 

சச்சின் டெண்டுல்கர் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினர் பெயரில் கரிபீயன் பகுதியில் உள்ள பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகளில் முதலீடு செய்துள்ளதாக ஆய்வு அறிக்கை தகவல் தெரிவித்துள்ளது. சட்டவிரோதமாக வெளிநாட்டில் சொத்து வாங்கியதாக எழுந்த குற்றச்சாட்டை சச்சின் தரப்பு மறுத்துள்ளது. வெளிநாட்டில் முதலீடு செய்யப்பட்ட விவரங்கள் அனைத்தும் வெளிப்படையானவை. அவை அரசுக்குத் தெரியப்படுத்தப்பட்டு முறையாக வரி செலுத்தப்பட்டதாக சச்சின் டெண்டுல்கர் அறக்கட்டளையின் இயக்குநர் மிரின்மோய் முகர்ஜி கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com