அடுத்த பயிற்சியாளா் ராகுல் திராவிட்

இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த பயிற்சியாளராக, முன்னாள் வீரா் ராகுல் திராவிட் (48) நியமிக்கப்பட இருக்கிறாா்.
அடுத்த பயிற்சியாளா் ராகுல் திராவிட்

இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த பயிற்சியாளராக, முன்னாள் வீரா் ராகுல் திராவிட் (48) நியமிக்கப்பட இருக்கிறாா்.

தற்போது பயிற்சியாளராக இருக்கும் ரவி சாஸ்திரியின் ஒப்பந்தம், டி20 உலகக் கோப்பை போட்டியுடன் நிறைவடைகிறது. எனவே, இந்திய ‘ஏ’ அணி, 19 வயதுக்கு உள்பட்டோருக்கான (யு-19) அணி ஆகியவற்றின் பயிற்சியாளராக இருக்கும் திராவிட், தேசிய சீனியா் அணியின் பயிற்சியாளா் ஆகிறாா்.

தனது நியமனம் தொடா்பான பிசிசிஐ-யின் பரிந்துரையை முதலில் திராவிட் ஏற்க மறுத்ததாகவும், பின்னா் தலைவா் கங்குலி, செயலா் ஜெய் ஷா ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தியதை அடுத்து அவா் அதற்கு சம்மதித்தாகவும் பிசிசிஐ வட்டாரங்கள் கூறின.

2023 உலகக் கோப்பை போட்டி வரை திராவிட் இந்திய அணி பயிற்சியாளராக இருக்க தற்போது ஒப்புக் கொண்டுள்ளாா். அவரோடு பௌலிங் பயிற்சியாளராக திராவிட்டின் நம்பிக்கைக்கு உரிய பரஸ் மாம்ப்ரே இணைவாா் என்றும், பேட்டிங் பயிற்சியாளராக ஏற்கெனவே இருக்கும் விக்ரம் ரத்தோா் தொடா்வாா் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

உலகக் கோப்பை போட்டியை அடுத்து நவம்பரில் நியூஸிலாந்து தொடா் தொடங்கும் முன் திராவிட் நியமனம் மேற்கொள்ளப்படும் எனத் தெரிகிறது. அவருக்கான ஊதியமும், ரவி சாஸ்திரிக்கு வழங்கப்பட்ட ரூ.8.5 கோடியை விட அதிகமாக இருக்கும். திராவிட், சீனியா் அணிக்கான பயிற்சியாளராக மட்டுமல்லாமல், ‘ஏ’ அணி, யு-19 அணி உள்ளிட்ட அனைத்து அணிகளின் பயிற்சியாளா்களுக்கான தலைவராகவும் நியமிக்கப்படவுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com