குறைந்த இன்னிங்ஸில் 23,000 ரன்கள்: விராட் கோலி புதிய சாதனை

சர்வதேச கிரிக்கெட்டில் 23,000 ரன்களைப் பூர்த்தி செய்தார் விராட் கோலி...
குறைந்த இன்னிங்ஸில் 23,000 ரன்கள்: விராட் கோலி புதிய சாதனை

சர்வதேச கிரிக்கெட்டில் குறைந்த இன்னிங்ஸில் 23,000 ரன்கள் எடுத்து இந்திய கேப்டன் விராட் கோலி சாதனை படைத்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. 3 டெஸ்டுகள் முடிந்த நிலையில் இரு அணிகளும் 1-1 என சமநிலையில் உள்ளன. நான்காவது டெஸ்ட் லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று தொடங்கியுள்ளது. 

டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், பந்துவீச்சைத் தேர்வு செய்தார். உணவு இடைவேளையின்போது இந்திய அணி 25 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 54 ரன்கள் எடுத்துள்ளது. கோலி 18, ஜடேஜா 2 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். 

இந்நிலையில் இந்த  இன்னிங்ஸில் விளையாடும்போது சர்வதேச கிரிக்கெட்டில் 23,000 ரன்களைப் பூர்த்தி செய்தார் விராட் கோலி. குறைந்த இன்னிங்ஸில் இந்த ரன்களை எடுத்து புதிய சாதனை படைத்துள்ளார். 

சர்வதேச கிரிக்கெட்டில் குறைந்த இன்னிங்ஸில் 23,000 ரன்கள்

விராட் கோலி - 490 இன்னிங்ஸ்
சச்சின் - 522 இன்னிங்ஸ்
பாண்டிங் - 544 இன்னிங்ஸ்

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள்

சச்சின் - 34,357 ரன்கள்
சங்கக்காரா - 28,016
பாண்டிங் - 27,483
ஜெயவர்தனே - 25,957
காலிஸ் - 25,534
டிராவிட் - 24,208
கோலி - 23,000

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com