பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

ஐபிஎல் 2021-ல் அதிக சிக்ஸர்கள்: முதலிடத்தில் சிஎஸ்கே, கடைசி இடம் எந்த அணிக்குத் தெரியுமா?

அதிக சிக்ஸர்களை அடித்த பேட்ஸ்மேன்களின் பட்டியலில் பஞ்சாப் அணியின் கே.எல். ராகுல் 16 சிக்ஸர்களுடன்...

News image
Updated On :18 செப்டம்பர் 2021, 10:14 am

DIN

ஐபிஎல் 2021 போட்டியில் அதிக சிக்ஸர்கள் அடித்த அணிகளில் சிஎஸ்கே முதலிடத்தில் உள்ளது.

கரோனா பாதிப்பால் நிறுத்தப்பட்ட ஐபிஎல் 2021 போட்டி, நாளை (செப்டம்பா் 19) ஐக்கிய அரபு அமீரகத்தில் மீண்டும் தொடங்குகிறது. துபையில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பா் கிங்ஸ் அணிகள் விளையாடவுள்ளன. 

கடந்த வருடம் அதிக சிக்ஸர்கள் அடித்த அணிகளில் 137 சிக்ஸர்களுடன் முதலிடம் பிடித்தது மும்பை இந்தியன்ஸ் அணி. 105 சிக்ஸர்களுடன் ராஜஸ்தானுக்கு 2-ம் இடம்.

இந்த வருடம் பந்தை சிக்ஸருக்குப் பறக்க விடுவதில் சிஎஸ்கே முன்னணி வகிக்கிறது. சிக்ஸர்கள் பட்டியலில் 43 சிக்ஸர்களுடன் மும்பை அணி 7-வது இடத்தை ஹைதராபாத் அணியுடன் இணைந்து வகிக்கிறது. புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள தில்லி அணி அதிசயமாக சிக்ஸர்கள் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. 32 சிக்ஸர்கள் மட்டுமே. ஏழு ஆட்டங்களில் 62 சிக்ஸர்களுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலிடத்தில் உள்ளது.

இந்த வருடம், அதிக சிக்ஸர்களை அடித்த பேட்ஸ்மேன்களின் பட்டியலில் பஞ்சாப் அணியின் கே.எல். ராகுல் 16 சிக்ஸர்களுடன் முதலிடத்தில் உள்ளார். 

ஐபிஎல் 2021: அதிக சிக்ஸர்களை அடித்த பேட்ஸ்மேன்கள்

கே.எல். ராகுல் - 16
பேர்ஸ்டோ - 15
ராயுடு - 13
பட்லர் - 13
ரஸ்ஸல் - 13
டு பிளெஸ்சிஸ் - 13
பொலார்ட் - 13

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.