வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! சர்வாதிகாரி பழனிசாமி இனி எந்தக் காலத்திலும் வெற்றி பெறமாட்டார்: ஓபிஎஸ் காட்டம்!அன்பானவர், பண்பானவர் ஓபிஎஸ்; திமுக கூட்டணியில் ஜனநாயக சக்திகள்! - மு.க. ஸ்டாலின்எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுக துணைப் பொதுச் செயலாளர் ஓபிஎஸ்? போடியில் மீண்டும் போட்டி? திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்! ஆடம்பரத்தைத் தவிர்த்திடுவீர்! பிறந்த நாளையொட்டி கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை! சட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனை
/

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து மொயீன் அலி ஓய்வு: அதிகாரபூர்வ அறிவிப்பு

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக இங்கிலாந்து ஆல்ரவுண்டர் மொயீன் அலி அறிவித்துள்ளார்.

News image
Updated On :28 ஜனவரி 2024, 4:14 am

DIN

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக இங்கிலாந்து ஆல்ரவுண்டர் மொயீன் அலி அறிவித்துள்ளார்.

இங்கிலாந்து அணிக்காக 64 டெஸ்டுகள், 112 ஒருநாள், 38 டி20 ஆட்டங்களில் இடம்பெற்றுள்ளார் மொயீன் அலி. டெஸ்ட் கிரிக்கெட்டில் 2914 ரன்களும் 195 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார்.

ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் மொயீன் அலி, டி20 உலகக் கோப்பைக்கான இங்கிலாந்து அணியிலும் இடம்பெற்றுள்ளார்.

இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக மொயீன் அலி அறிவித்துள்ளார். எனினும் இங்கிலாந்து அணிக்காக ஒருநாள், டி20 ஆட்டங்களில் தொடர்ந்து விளையாடவுள்ளார். 

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவது பற்றி மொயீன் அலீ கூறியதாவது:

எனக்கு இப்போது 34 வயதாகிவிட்டது. என் விருப்பத்துக்கேற்ப கிரிக்கெட் ஆட்டங்களை நீண்ட காலம் விளையாட நினைக்கிறேன். டெஸ்ட் கிரிக்கெட் அற்புதமானது. இதில் நீங்கள் சிறப்பாக விளையாடும்போது வேறு எந்த கிரிக்கெட்டை விடவும் இதில் அதிக திருப்தி கிடைக்கும். டெஸ்ட் கிரிக்கெட்டை ரசித்து விளையாடினேன். ஆனால் அதன் தீவிரத்தன்மையால் சில நேரங்களில் அதிக உழைப்பு தேவைப்படுகிறது. டெஸ்ட் கிரிக்கெட்டில் போதுமான அளவு விளையாடிவிட்டேன் என நினைக்கிறேன். இங்கிலாந்து இஸ்லாமியர்கள் கிரிக்கெட்டில் ஈடுபட இனி நான் ஊக்கமாக இருப்பேன் என நினைக்கிறேன். இங்கிலாந்து வீரராக இல்லாவிட்டாலும் ஆம்லா எனக்கு அப்படித்தான் ஊக்கமளித்தார். என்னுடைய பெற்றோர், குடும்பத்தினர் என் கிரிக்கெட் பயணத்தில் மிகவும் ஒத்துழைத்தார்கள். அவர்களுக்கு நன்றி என்று கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.