ஐபிஎல்: புள்ளிகள் பட்டியலைக் கலைத்துப் போட்ட வார இறுதி ஆட்டங்கள்!

ஐபிஎல் போட்டி எதிர்பாராத திருப்பத்தைச் சந்தித்துள்ளது.
ஐபிஎல்: புள்ளிகள் பட்டியலைக் கலைத்துப் போட்ட வார இறுதி ஆட்டங்கள்!

கடந்த வெள்ளியன்று ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது சென்னை சூப்பா் கிங்ஸ் அணி. இதையடுத்து புள்ளிகள் பட்டியலில் முதலிடத்துக்கு மீண்டும் முன்னேறியது சென்னை. சனி, ஞாயிறு என  வார இறுதி ஆட்டங்களுக்கு முன்பு புள்ளிகள் பட்டியலில் அணிகளுக்குக் கிடைத்த இடங்கள்:

1. சென்னை 
2. தில்லி
3.பெங்களூர்
4. கொல்கத்தா
5. ராஜஸ்தான்
6. மும்பை
7. பஞ்சாப்
8. ஹைதராபாத்

ஆனால் வார இறுதி ஆட்டங்களில் நடைபெற்ற 4 ஆட்டங்களும் புள்ளிகள் பட்டியலைக் கலைத்துப் போட்டு விட்டது. முதல் இடத்தில் சென்னையும் கடைசி இடத்தில் ஹைதராபாத்தும் நீடிக்கின்றன. அதேபோல முதல் நான்கு இடங்களிலும் மாற்றம் ஏற்படவில்லை. ஆனால் 5,6,7 இடங்களில் பெரிய மாற்றம் ஏற்பட்டு விட்டது. மீண்டும் போட்டியை வெல்லும் என்று கணிக்கப்பட்ட மும்பை அணி தொடர் தோல்விகளால் 7-ம் இடத்துக்கு இறங்கிவிட்டது. 5-ம் இடத்துக்கு பஞ்சாப் முன்னேறிவிட்டது. ராஜஸ்தான் 6-ம் இடத்துக்கு இறங்கிவிட்டது. இதனால் ஐபிஎல் போட்டி எதிர்பாராத திருப்பத்தைச் சந்தித்துள்ளது.

சன்ரைசர்ஸ் - ராஜஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன. மற்ற அணிகள் அனைத்தும் தலா 10 ஆட்டங்களில் விளையாடிவிட்டன. ராஜஸ்தான் இன்று வெற்றி பெற்றுவிட்டால் 4-ம் இடத்துக்கு முன்னேறிவிடும். இதனால் பிளேஆஃப் சுற்றில் இடம்பெற அதிகமாக மெனக்கெட வேண்டிய நிலைமையில் உள்ள கொல்கத்தா, பஞ்சாப், மும்பை அணிகளுக்குக் கடும் நெருக்கடி ஏற்படும். இன்னும் 12 நாள்களில் லீக் சுற்று முடிவடைய உள்ளதால் இனிவரும் ஆட்டங்கள் மேலும் பரபரப்பாக அமையும் என எதிர்பார்க்கலாம்.

புள்ளிகள் பட்டியல்

 வரிசை  அணிகள் ஆட்டங்கள்  வெற்றி  தோல்வி  புள்ளிகள்  நெட்   ரன்ரேட் 
 1. சென்னை 10 8 2 16 +1.069
 2. தில்லி 10 8 2 16 +0.711
 3. பெங்களூர் 10 6 4 12 -0.359
 4. கொல்கத்தா 10 4 6 8 +0.322
 5. பஞ்சாப் 10 4 6 8 -0.271
 6. ராஜஸ்தான் 9 4 5 8 -0.319
 7. மும்பை 10 4 6 8 -0.551
 8. ஹைதராபாத்  9 1 8 2 -0.637

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com