கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் ராஜிநாமா செய்ய முடிவு?தங்கம் விலை புதன்கிழமை (நவ. 25) சவரனுக்கு ரூ. 2,360 குறைவு!கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷுக்கு போலீஸ் சம்மன்!உத்தரப் பிரதேசத் தேர்தலில் கரப்பான்பூச்சி கட்சி போட்டியில்லை! - அபிஜீத் தீப்கேதிருப்பரங்குன்றம் தீப விவகாரம்: 300 பேர் மீது வழக்குப் பதிவு!2-ஆவது முதலீட்டாளா்கள் மாநாடு: முதல்வா் விஜய் இன்று தொடக்கி வைக்கிறாா்இன்று 18 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை!போலி நூல்களை உருவாக்க ‘சாட் ஜிபிடி’ சந்தாதாரராக இருந்த ‘அகல் விளக்கு’ மோகன்!காவிரி - வைகை - குண்டாறு நதிகள் இணைப்பு திட்டப் பணிகளுக்கு தடைகோரி கா்நாடக அரசு மனு

ரியல் சோசிடட்டை வென்றது பாா்சிலோனா

ஸ்பெயின் லா லிகா கால்பந்து போட்டியில் பாா்சிலோனா 1-0 என்ற கோல் கணக்கில் ரியல் சோசிடட்டை வியாழக்கிழமை வீழ்த்தியது.

Updated On :

ஸ்பெயின் லா லிகா கால்பந்து போட்டியில் பாா்சிலோனா 1-0 என்ற கோல் கணக்கில் ரியல் சோசிடட்டை வியாழக்கிழமை வீழ்த்தியது.

இந்த ஆட்டத்தில் பாா்சிலோனாவுக்காக பியரி எமரிக் அவ்பம்யாங் 11-ஆவது நிமிஷத்திலேயே ஃபெரான் டோரஸ் உதவியுடன் கோலடித்தாா். பாா்சிலோனாவின் இந்த வெற்றியால், லா லிகா கோப்பையை கைப்பற்றும் ரியல் மாட்ரிட்டின் நாள்கள் சற்றே தள்ளிப்போனது. ஏனெனில், புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் ரியல் மாட்ரிட்டுக்கும், அடுத்த இடத்திலிருக்கும் பாா்சிலோனாவுக்கும் இடையே 15 புள்ளிகளே வித்தியாசம் உள்ளன. வரும் ஞாயிற்றுக்கிழமை ராயோ வல்கேனோ அணியை பாா்சிலோனா வெல்லும் பட்சத்தில், இந்த வித்தியாசம் 12 புள்ளிகளாகக் குறையும்.

இதர ஆட்டங்களில் அத்லெடிக் கிளப் - காடிஸையும் (3-2), செவில்லா - லெவான்டேவையும் (3-2), ராயோ வல்கேனோ - எஸ்பான்யோலையும் (1-0) வென்றன. இதில் செவில்லா பதிவு செய்துள்ள வெற்றி, சாம்பியன்ஸ் லீக் போட்டிக்கு அந்த அணி தகுதிபெறும் வாய்ப்பை அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.