செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு அடுத்ததாக அமெரிக்காவின் மியாமியில் நடைபெறும் எஃப்டிஎக்ஸ் கிரிப்டோ கோப்பைப் போட்டியில் விளையாடி வருகிறார் இந்தியாவின் பிரபல செஸ் வீரர் பிரக்ஞானந்தா.
முதல் சுற்றில் உலகின் நெ.1 ஜூனியர் வீரர் அலிரேஸா ஃபிரோஜாவை 2.5-1.5 என வீழ்த்தினார் பிரக்ஞானந்தா 2-வது சுற்றில் பிரபல வீரர் அனிஷ் கிரியை 2.5-1.5 என வீழ்த்தினார்.
3-வது சுற்றில் அமெரிக்காவின் பிரபல வீரரான ஹான்ஸ் நீமன்னை எதிர்கொண்டார் பிரக்ஞானந்தா. கார்ல்சனுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்று பிறகு தோற்ற நீமன், பிரக்ஞானந்தாவுக்கு எதிராகவும் முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்றார். அடுத்த ஆட்டத்தில் பிரக்ஞானந்தா வெற்றி பெற்று சமன் செய்தார். 3-வது ஆட்டம் டிரா ஆனது. 4-வது ஆட்டத்தில் அபாரமாக விளையாடி வெற்றி பெற்று 2.5-1.5 என ஹான்ஸ் நீமன்னை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா.
உலக சாம்பியன் கார்ல்சன் 2.5-1.5 என பிரபல வீரர் லெவோன் ஆரோனியனை வீழ்த்தினார்.
8 வீரர்கள் விளையாடும் இந்தப் போட்டியில் 9 புள்ளிகளுடன் கார்ல்சனுடன் இணைந்து முதல் இடத்தில் உள்ளார் பிரக்ஞானந்தா. 4-வது சுற்றில் லெவோன் ஆரோனியனை அவர் எதிர்கொள்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு: உச்ச நீதிமன்றத்தில் முறையிடுவோம்! - திமுக

லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்! இதுவரை 290 பெண்கள் உள்பட 2,198 பேர் பலி!
வானதி சீனிவாசன் உடல்நிலை: மருத்துவமனை தகவல்!

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


