தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட்: ரோஹித் சர்மா விலகல், கே.எல். ராகுல் கேப்டன்

வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கு கே.எல்.ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

News image
Updated On :11 டிசம்பர் 2022, 3:28 pm

DIN

வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கு கே.எல்.ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

வங்கதேசத்துக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 2 டெஸ்டுகளில் விளையாடுகிறது இந்திய அணி. இதில் ஒருநாள் தொடரை 2-1 என்கிற கணக்கில் வங்கதேச அணி கைப்பற்றியது. இவ்விரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி டிசம்பர் 14 அன்று தொடங்குகிறது. இந்த நிலையில் வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கு கே.எல்.ராகுல் கேப்டனாக செயல்படுவார் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. 

காயம் காரணமாக ரோஹித் சர்மா விலகியதையடுத்து முதல் டெஸ்ட் போட்டிக்கு கேப்டனாக ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் ரோஹித் சர்மாவிற்கு பதிலாக அபிமன்யு ஈஸ்வரன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல் முகமது ஷமிக்கு பதிலாக நவ்தீப் சைனி, ரவீந்திர ஜடேஜாவிற்கு பதிலாக சௌரப் குமார் மற்றும் பந்து வீச்சாளர் ஜெயதேவ்க்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 

இந்திய டெஸ்ட் அணி: கேஎல் ராகுல் (கேப்டன்), புஜாரா (துணை கேப்டன்), ஷுப்மன் கில், விராத் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), கேஎஸ் பரத் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், அக்ஸர் படேல், குல்தீப் யாதவ், ஷர்துல் தாக்குர், முகமது சிராஜ், உமேஷ் யாதவ், அபிமன்யூ ஈஸ்வரன், நவ்தீப் சைனி, சௌரப் குமார், ஜெய்தேவ் உனாத்கத்.

வங்கதேச டெஸ்ட் அணி: ஷகிப் அல் ஹசன் (கேப்டன்), மஹ்முதுல் ஹசன் ஜாய், நஜ்முல் ஹுசைன் ஷான்டோ, மோமினுல் ஹக், யாசிர் அலி, முஷ்ஃபிகுர் ரஹிம், லிட்டன் தாஸ், நுருல் ஹசன், மெஹித் ஹசன் மிராஸ், தைஜுல் இஸ்லாம், டஸ்கின் அஹமது, கலீத் அஹமது, எபடாட் ஹுசைன், ஷொரிஃபுல் இஸ்லாம், ஸாகிர் ஹுசைன், ரஹ்மான் ராஜா, அனமுல் ஹக்.

இந்தியாவுக்கு எதிராக ஒருமுறை கூட டெஸ்டில் வென்றதில்லை வங்கதேச அணி. 11 ஆட்டங்களில் 9-ல் தோல்வியடைந்து 2 டெஸ்டுகளை டிரா செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.