அபிமன்யு ஈஸ்வரனுக்கு வாய்ப்பு கிடைக்குமா?: தினேஷ் கார்த்திக்

இரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரை 2-1 என வென்றது வங்கதேச அணி. 
அபிமன்யு ஈஸ்வரனுக்கு வாய்ப்பு கிடைக்குமா?: தினேஷ் கார்த்திக்


வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ராகுலும் ஷுப்மன் கில்லும் தொடக்க வீரர்களாகக் களமிறங்குவார்கள் என இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.

இந்தியா - வங்கதேசம் ஆகிய அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட், புதன் அன்று தொடங்குகிறது.

இரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரை 2-1 என வென்றது வங்கதேச அணி. 

காயம் காரணமாக ரோஹித் சர்மா முதல் டெஸ்டில் இடம்பெறவில்லை. பும்ரா, ஷமி, ஜடேஜா ஆகியோரும் காயம் காரணமாக டெஸ்ட் தொடரில் இடம்பெறவில்லை. இதனால் கே.எல். ராகுல் இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். உனாட்கட், அபிமன்யு ஈஸ்வரன், செளரப் குமார், நவ்தீப் சைனி ஆகியோர் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.

டெஸ்ட் தொடர் பற்றி இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் ஒரு பேட்டியில் கூறியதாவது:

அபிமன்யு ஈஸ்வரன் கடந்த சில வருடங்களாக நன்கு விளையாடி கவனத்தை ஈர்த்துள்ளார். அதனால் இந்த வாய்ப்பைப் பெற்றுள்ளார். முதல் டெஸ்டில் 11 பேரில் ஒருவராக அவர் விளையாடப் போவதில்லை. கே.எல். ராகுலும் ஷுப்மன் கில்லும் தொடக்க வீரர்களாகக் களமிறங்குவார்கள். இந்திய அணியின் கதவைத் தட்டிக் கொண்டிருக்கும் திறமையான வீரர், அபிமன்யு ஈஸ்வரன். பெங்காலுக்காகக் கடந்த நான்கைந்து வருடங்களாக நன்கு விளையாடி வருகிறார். 

டெஹ்ராடூனில் ஈஸ்வரனின் தந்தை சொந்த மைதானத்தில் பயிற்சிகளுக்கான ஏற்பாடுகளைச் செய்து தந்துள்ளார். நான் அங்குச் சென்றுள்ளேன். ஈஸ்வரனின் கடுமையான உழைப்பை நேரில் பார்த்துள்ளேன் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com