‘மெஸ்ஸி இந்தியாவில் பிறந்திருந்தால்...’- வைரலாகும் சேவாக்கின் பதிவு! 

‘மெஸ்ஸி இந்தியாவில் பிறந்திருந்தால்...’- வைரலாகும் சேவாக்கின் பதிவு! 

மெஸ்ஸி இந்தியாவில் பிறந்திருந்தால் என கிரிக்கெட் வீரர் பகிர்ந்திருக்கும் பதிவு வைரலாகி வருகிறது. 

கத்தாரில் நடைபெற்ற கால்பந்து உலகக் கோப்பையை ஆர்ஜென்டீனா அணி வென்றுள்ளது. இறுதிச்சுற்றில் கூடுதல் நேரத்துக்குப் பிறகு இரு அணிகளும் 3-3 என சமநிலையில் இருந்தன.  பின்னர் பிரான்ஸை 4-2 என பெனால்டியில் தோற்கடித்து சாம்பியன் ஆனது ஆர்ஜென்டீனா. 

1978, 1986-க்குப் பிறகு ஆர்ஜென்டீனா அணி வென்ற 3-வது உலகக் கோப்பை இது. மெஸ்ஸி முதல்முறையாக உலகக் கோப்பையை ஏந்திய தருணமும் இம்முறைதான் அமைந்தது. கால்பந்து உலகக் கோப்பைப் போட்டிக்குப் பிறகு ஆர்ஜென்டீனா அணிக்காகத் தொடர்ந்து விளையாடவுள்ளதாக பிரபல வீரர் மெஸ்ஸி அறிவித்துள்ளார்.

இந்நிலையில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் விரேந்திர சேவாக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு மீமை பதிவிட்டுள்ளார். இதில் மெஸ்ஸி இந்தியாவில் பிறந்திருந்தால் உலகக்கோப்பை வெற்றிக்கு பிறகு காவலராக நியமிக்கப்பட்டிருப்பார் என இருக்கும். இதில் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் சிலர் மெஸ்ஸி இந்தியாவில் பிறந்திருந்தால் வாய்ப்பு கிடைத்திருக்காது எனவும் கூறி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com