ஐஎல்டி20: துபை கேபிடல்ஸ் அணியில் உத்தப்பா

ஐக்கிய அரபு அமீரகத்தில் மட்டுமல்லாமல் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, மே.இ. தீவுகள், இங்கிலாந்து போன்ற நாடுகளில் நடைபெறும்...
ஐஎல்டி20: துபை கேபிடல்ஸ் அணியில் உத்தப்பா

சர்வதேச மற்றும் இந்திய உள்ளூர் கிரிக்கெட்டிலிருந்து கடந்த செப்டம்பர் மாதம் ஓய்வு பெற்றார் ராபின் உத்தப்பா.

இந்திய அணிக்காக 46 ஒருநாள், 13 டி20 ஆட்டங்களில் உத்தப்பா விளையாடியுள்ளார். மேலும் 205 ஐபிஎல் ஆட்டங்களிலும் விளையாடி ரசிகர்களைக் கவர்ந்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த 2021-ம் ஆண்டு ஐபிஎல் கோப்பையை வென்றதில் உத்தப்பாவின் பங்களிப்பும் உண்டு. பிளேஆஃப் ஆட்டத்தில் 44 பந்துகளில் 63 ரன்களும் இறுதிச்சுற்றில் 15 பந்துகளில் 31 ரன்களும் எடுத்தார். வெளிநாட்டு டி20 லீக் போட்டிகளில் விளையாடுவதற்காகச் சமீபத்தில் ஓய்வு அறிவிப்பை வெளியிட்டார்.

இந்நிலையில் ஜனவரியில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள சர்வதேச லீக் டி20 என்கிற ஐஎல்டி20 போட்டியில் விளையாடவுள்ளார் உத்தப்பா. இப்போட்டிகளில் பங்கேற்கவுள்ள ஆறு அணிகளில் துபை கேபிடல்ஸ் அணி, 37 வயது ராபின் உத்தப்பாவைத் தேர்வு செய்துள்ளது. 

ஐக்கிய அரபு அமீரகத்தில் மட்டுமல்லாமல் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, மே.இ. தீவுகள், இங்கிலாந்து போன்ற நாடுகளில் நடைபெறும் டி20 போட்டிகளிலும் விளையாட ஆர்வமாக உள்ளதாக உத்தப்பா தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com