எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

கோவை ரஞ்சி ஆட்டம்: சாய் சுதர்சன் சதம், தமிழ்நாடு 273/4 ரன்கள்!

தமிழக அணி, 77 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 273 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது.

News image
சாய் சுதர்சன் (கோப்புப் படம்)
Updated On :21 டிசம்பர் 2022, 12:15 pm

DIN

ஆந்திர அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை ஆட்டத்தில் தமிழக அணி, 77 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 273 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது.

2022-23 ரஞ்சி கோப்பை போட்டியில் ஹைதராபாத் அணிக்கு எதிரான முதல் ஆட்டத்தை டிரா செய்த தமிழக அணி, 3 புள்ளிகளைப் பெற்றது. 2-வது ஆட்டத்தில் ஆந்திராவை எதிர்கொள்கிறது.

தமிழ்நாடு - ஆந்திரா அணிகளுக்கு இடையிலான ரஞ்சி ஆட்டம் கோயம்புத்தூர் எஸ்என்ஆர் கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆந்திர அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. தமிழக அணியில் வாஷிங்டன் சுந்தர் இடம்பெற்றுள்ளார்.

32 வருடங்கள் கழித்து கோயம்புத்தூரில் ரஞ்சி கோப்பை ஆட்டம் நடைபெறுகிறது. கடந்த வருடம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிரான இரு டெஸ்டுகள் நடைபெற்றபோது ஆடுகள வடிவமைப்பாளராக இருந்த ரமேஷ் குமார், இந்த மைதானத்தின் ஆடுகள வடிவமைப்பாளராகச் செயல்படுகிறார்.

முதல் நாளன்று ஆந்திர அணி, 5 விக்கெட் இழப்புக்கு 277 ரன்களுடன் நல்ல நிலைமையில் இருந்தது. ஆனால் இன்று மீதமுள்ள 5 விக்கெட்டுகளையும் 20 ரன்களுக்கு வீழ்த்தி அசத்தியது தமிழக அணி. ஆந்திரா முதல் இன்னிங்ஸில் 100.1 ஓவர்களில் 297 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. தொடக்க வீரர் அபிஷேக் ரெட்டி அதிகபட்சமாக 85 ரன்கள் எடுத்தார். சாய் கிஷோர், சந்தீப் வாரியர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். 

தமிழக அணி முதல் இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடி வருகிறது.  2-வது நாள் முடிவில் தமிழக அணி, 77 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 273 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்க வீரர் சாய் சுதர்சன் 113, பாபா அபரஜித் 88 ரன்கள் எடுத்தார்கள். வாஷிங்டன் சுந்தர் 7 ரன்களுடனும் விஜய் சங்கர் ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் உள்ளார்கள். தமிழக அணி 24 ரன்கள் பின் தங்கியுள்ளநிலையில் கைவசம் 6 விக்கெட்டுகள் உள்ளதால் முதல் இன்னிங்ஸில் குறைந்தது 100 ரன்கள் முன்னிலை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.