பாகிஸ்தான் கிரிக்கெட்: ரமீஸ் ராஜா நீக்கம்

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் பதவியிலிருந்து ரமீஸ் ராஜா நீக்கப்பட்டுள்ளார்.
ரமீஸ் ராஜா (நடுவில்)
ரமீஸ் ராஜா (நடுவில்)

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் பதவியிலிருந்து ரமீஸ் ராஜா நீக்கப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவராக முன்னாள் வீரர் ரமீஸ் ராஜா, கடந்த வருடம் செப்டம்பர் மாதம் நியமிக்கப்பட்டார். இதற்கு முன்பு வாரியத்தில் 2003-04-ல் தலைமை அதிகாரியாகப் பணியாற்றினார்.  ரமீஸ் ராஜா - 57 டெஸ்டுகள், 198 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.

2004-ல் இந்தியா பாகிஸ்தானுக்குச் சுற்றுப்பயணம் செய்ததற்கு ரமீஸ் ராஜா முக்கியக் காரணமாக இருந்தார். அதேபோல பல வருடங்களுக்குப் பிறகு 2022-ல் ஆஸ்திரேலியாவும் இங்கிலாந்தும் டெஸ்ட் தொடருக்காக பாகிஸ்தானுக்குச் சுற்றுப்பயணம் செய்ததிலும் ரமீஸ் ராஜாவின் பங்களிப்பு மிக அதிகம். எனினும் இங்கிலாந்துக்கு எதிராக 0-3 என முழுமையாகத் தோற்ற பாகிஸ்தான் அணி, சொந்த மண்ணில் கடைசியாக விளையாடிய 4 டெஸ்டுகளிலும் தோல்வியடைந்துள்ளது. இதையடுத்து ரமீஸ் ராஜாவின் பதவி பறிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை நிர்வகிக்க நஜம் சேதி தலைமையிலான 14 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் முன்னாள் பாகிஸ்தான் கேப்டன்களான ஷாஹித் அஃப்ரிடி, சனா மிர் ஆகியோர் இடம்பெற்றுள்ளார்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com