தவெக நட்சத்திரப் பேச்சாளர் பட்டியலிலிருந்து கூட்டணிக் கட்சித் தலைவர்களின் பெயர்கள் நீக்கம்! பௌர்ணமி கிரிவலம்: விழுப்புரம் - திருவண்ணாமலைக்கு செப். 26-இல் சிறப்பு ரயில்!முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

ஐபிஎல் போட்டியில் இம்பாக்ட் வீரர்: விதிமுறைகள் சொல்வது என்ன?

ஐபிஎல் போட்டியில் அடுத்த ஆண்டு முதல் இம்பாக்ட் வீரர் என்கிற புதிய விதிமுறை அமலுக்கு வரவுள்ளது.

Published On :

ஐபிஎல் போட்டியில் அடுத்த ஆண்டு முதல் இம்பாக்ட் வீரர் என்கிற புதிய விதிமுறை அமலுக்கு வரவுள்ளது. 

இந்தாண்டு சையத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டியில் இம்பாக்ட் வீரர் என்கிற புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியது பிசிசிஐ. ஒவ்வொரு அணியும் ஆட்டத்துக்கு முன்பு வழக்கமாகக் கொடுக்கப்படும் 11 வீரர்களின் பெயர்களோடு 4 மாற்று வீரர்களின் பெயர்களையும் அளிக்க வேண்டும். அந்த 4 வீரர்களில் ஒருவரை ஆட்டத்தின் நடுவில் பயன்படுத்திக் கொள்ளலாம். ஏதாவது ஒரு இன்னிங்ஸில் 14-வது ஓவர் முடியும் முன்பு இம்பாக்ட் வீரரை அணிகள் பயன்படுத்திக்கொள்ளலாம். 

இந்நிலையில் 2023 ஐபிஎல் போட்டியில் இம்பாக்ட் வீரருக்கான விதிமுறைகளை வெளியிட்டுள்ளது ஐபிஎல் நிர்வாகம். அந்த விதிமுறையில் உள்ள முக்கிய அம்சங்கள்:

ஒவ்வொரு அணியும் கூடுதலாக 4 வீரர்களின் பெயர்களை டாஸின் போது வெளியிட வேண்டும். இந்த நான்கு வீரர்களில் ஒருவர் இம்பாக்ட் வீரராகப் பங்கேற்கலாம். 4 வீரர்களும் இந்திய வீரர்களாக மட்டுமே இருக்க வேண்டும்.

மாற்று வீரரை எப்போது வேண்டுமானாலும் சேர்க்கலாம். யாருக்குப் பதிலாக மாற்று வீரர் உள்ளே நுழைகிறாரோ அந்த வீரர் இனிமேல் ஆட்டத்தில் எவ்விதத்திலும் பங்கேற்க முடியாது. ஒருவேளை ஓர் அணியில் 3 வெளிநாட்டு வீரர்கள் மட்டும் இருந்தால் மாற்று வீரராக வெளிநாட்டு வீரரைத் தேர்வு செய்துகொள்ளலாம். 

மாற்று வீரர் அணியில் இடம்பெற்றாலும் 11 பேர் மட்டுமே பேட்டிங் செய்ய முடியும். 

பந்துவீச்சில் அந்த நிலைமை இல்லை. உதாரணத்துக்கு மும்பையின் பும்ரா முதலிலேயே 4 ஓவர்களை வீசி விடுகிறார். எனில் அவரை வெளியேற்றி விட்டு புதிய பந்துவீச்சாளரைக் களமிறக்கலாம். அவரும் 4 ஓவர்களை வீசலாம். இதனால் பந்துவீச்சிலும் அணிகளுக்கு இந்தப் புதிய விதிமுறை நிறைய பலன்களைத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

2005, 2006-ம் ஆண்டுகளில் ஒருநாள் கிரிக்கெட்டில் சூப்பர் சப் விதிமுறை பயன்படுத்தப்பட்டது. குறிப்பிட்ட ஒரு வீரருக்குப் பதிலாக இன்னொருவரைத் தேர்வு செய்துகொள்ளலாம். ஆனால் அந்த பேட்டர் ஆட்டமிழந்துவிட்டால் சூப்பர் சப் வீரரால் பேட்டிங் செய்ய முடியாது. அதேபோல ஒரு பந்துவீச்சாளருக்குப் பதிலாகக் களமிறங்கினால் அந்த வீரர் எவ்வளவு ஓவர்களை வீசி முடித்துள்ளாரோ அதிலிருந்து மீதமுள்ள ஓவர்களை மட்டுமே சூப்பர் சப் வீரரால் வீச முடியும். 

ஆஸ்திரேலியாவின் பிபிஎல் போட்டியில் எக்ஸ் ஃபேக்டர் என்கிற ஒரு விதிமுறை அமலில் இருந்தது. தங்களுடைய அணியில் உள்ள 11 பேரில் ஒருவருக்குப் பதிலாக மாற்று வீரரை ஆட்டத்தின் பாதியில் அதாவது 10-வது ஓவரில் அதுவும் முதல் இன்னிங்ஸில் சேர்த்துக்கொள்ளலாம். எந்த வீரருக்குப் பதிலாக மாற்று வீரர் உள்ளே வருகிறாரோ, அந்த வீரர் பேட்டிங், பந்துவீச்சில் ஒரு ஓவருக்கு மேல் ஈடுபட்டிருக்கக் கூடாது. 

ஐபிஎல் போட்டியில் அணிகளுக்கு பேட்டிங்கிலும் பந்துவீச்சிலும் கூடுதலாக ஒரு வீரர் கிடைத்தால் அது எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும்! டாஸ், ஆடுகளத்தின் தன்மை போன்றவற்றால் அணிகள் பெரிதாகப் பாதிக்கப்படுவதைத் தடுக்க இம்பாக்ட் வீரர் உதவுவார். அதேபோல ஒரு வீரருக்குக் காயம் ஏற்பட்டாலும் இந்த வசதி பெரிதும் பயன்படும். ஓர் அணி ஓர் ஆட்டத்தில் ஒரு இம்பாக்ட் வீரரை மட்டுமே பயன்படுத்த முடியும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.