ஐபிஎல் ஏலம்: ஒவ்வொரு வருடமும் அதிகத் தொகைக்குத் தேர்வான வீரர்கள்!
ஐபிஎல் 2022 ஏலம் வரை ஒவ்வொரு வருடமும் அதிகத் தொகைக்குத் தேர்வான வீரர்களின் பட்டியல்...


ஐபிஎல் 2023 போட்டிக்கான வீரர்களின் ஏலம் டிசம்பர் 23 அன்று கொச்சியில் நடைபெற்று வருகிறது.
ஐபிஎல் போட்டியில் பங்கேற்க 991 வீரர்கள் பதிவு செய்தார்கள். அவர்களில் அணிகளின் விருப்பத்துக்கேற்ப 405 வீரர்கள் ஏலத்துக்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். அவர்களில் 273 இந்திய வீரர்கள், 132 வெளிநாட்டு வீரர்கள். இவர்களில் 119 வீரர்கள் சர்வதேச ஆட்டங்களில் விளையாடியவர்கள். இந்த 405 வீரர்களில் இருந்து அதிகபட்சமாக 30 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 87 வீரர்கள் ஏலம் வழியாகத் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஐபிஎல் 2023 போட்டிக்கான வீரர்கள் ஏலத்தில் சாம் கரண், ஸ்டோக்ஸ், கேம்ரூன் கிரீன் போன்ற ஆல்ரவுண்டர்கள் அதிகத் தொகைக்குத் தேர்வாக வாய்ப்புள்ளது.
ஐபிஎல் 2022 ஏலம் வரை ஒவ்வொரு வருடமும் அதிகத் தொகைக்குத் தேர்வான வீரர்களின் பட்டியல்:
2008: தோனி
2009: பிளிண்டாஃப், பீட்டர்சன்
2010: பாண்ட், பொலார்ட்
2011: கம்பீர்
2012: ஜடேஜா
2013: மேக்ஸ்வெல்
2014: யுவ்ராஜ் சிங்
2015: யுவ்ராஜ் சிங்
2016: ஷேன் வாட்சன்
2017: ஸ்டோக்ஸ்
2018: ஸ்டோக்ஸ்
2019: உனாட்கட்
2020: கம்மின்ஸ்
2021: கிறிஸ் மாரிஸ்
2022: இஷான் கிஷன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...