தடுமாறும் வங்கதேசம்: 4 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்தியா!

3-வது நாள் மதிய உணவு இடைவேளையின்போது 4 விக்கெட் இழப்புக்கு 71 ரன்கள் எடுத்துத் தடுமாறி வருகிறது.
தடுமாறும் வங்கதேசம்: 4 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்தியா!

இந்தியாவுக்கு எதிரான 2-வது மற்றும் கடைசி டெஸ்டில் வங்கதேச அணி 3-வது நாள் மதிய உணவு இடைவேளையின்போது 4 விக்கெட் இழப்புக்கு 71 ரன்கள் எடுத்துத் தடுமாறி வருகிறது.

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்டை 188 ரன்கள் வித்தியாசத்தில் வென்று டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது இந்திய அணி. 2-வது மற்றும் கடைசி டெஸ்ட், மிர்பூரில் வியாழன் அன்று தொடங்கியது. டாஸ் வென்ற வங்கதேச கேப்டன் ஷகிப் அல் ஹசன், பேட்டிங்கைத் தேர்வு செய்தார். ஆடுகளத்தில் புற்கள் நிறைய இருந்ததால் சிராஜ், உமேஷ் யாதவ், உனாட்கட் என மூன்று வேகப்பந்து வீச்சாளர்களைத் தேர்வு செய்துள்ளது இந்திய அணி. இதனால் கடந்த ஆட்டத்தில் ஆட்ட நாயகனாகத் தேர்வான குல்தீப் யாதவ் இம்முறை நீக்கப்பட்டுள்ளார்.

வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 73.5 ஓவர்களில் 227 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. மொமினுல் ஹக் 84 ரன்கள் எடுத்தார். கடைசி 5 விக்கெட்டுகளை 14 ரன்களுக்கு வீழ்த்தியது இந்தியா. உமேஷ் யாதவ், அஸ்வின் தலா 4 விக்கெட்டுகளும் உனாட்கட் 2 விக்கெட்டுகளும் எடுத்தார்கள். இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 86.3 ஓவர்களில் 314 ரன்கள் எடுத்து முன்னிலை பெற்றது. ரிஷப் பந்த் 93, ஷ்ரேயஸ் ஐயர் 87 ரன்கள் எடுத்தார்கள். இருவரும் 159 ரன்கள் கூட்டணி அமைத்தார்கள். தைஜுல் இஸ்லாம், ஷகிப் அல் ஹசன் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.

2-வது நாள் முடிவில் வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 6 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 7 ரன்கள் எடுத்தது. 

3-வது நாளான இன்று, முதல் பகுதியில் 4 விக்கெட்டுகளை இழந்தது வங்கதேசம். ஷான்டோ, மோனினுல் ஹக் தலா 5 ரன்களுக்கும் கேப்டன் ஷகிப் அல் ஹசன் 13 ரன்களுக்கும் முஷ்ஃபிகுர் ரஹிம் 9 ரன்களுக்கும் ஆட்டமிழந்தார்கள். அஸ்வின், உனாட்கட், சிராஜ், அக்‌ஷர் தலா 1 விக்கெட்டை எடுத்தார்கள். 

3-வது நாள் மதிய உணவு இடைவேளையின்போது வங்கதேச அணி 2-வது இன்னிங்ஸில் 33 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 71 ரன்கள் எடுத்துத் தடுமாறி வருகிறது. ஜாகிர் ஹசன் 37 ரன்களுடனும் லிட்டன் தாஸ் ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் உள்ளார்கள். அந்த அணிக்கு 8 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் 16 ரன்கள் பின்தங்கியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com