வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

மே.இ. தீவுகள் அணிக்கு எதிரான டி-20 தொடர்: கே.எல்.ராகுல், அக்‌ஷர் படேல் விலகல்

மே.இ. தீவுகள் அணிக்கு எதிரான டி-20 தொடரில் இருந்து கே.எல்.ராகுல், அக்‌ஷர் படேல் விலகியுள்ளனர். 

News image
Updated On :11 பிப்ரவரி 2022, 1:48 pm

DIN

மே.இ. தீவுகள் அணிக்கு எதிரான டி-20 தொடரில் இருந்து கே.எல்.ராகுல், அக்‌ஷர் படேல் விலகியுள்ளனர். 

மே.இ. தீவுகள் அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. ஏற்கெனவே 2 ஒருநாள் போட்டிகளில் வெற்றி பெற்று இந்திய அணி தொடரை கைப்பற்றியது. இன்று 3ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நடைபெற்று வருகிறது. 

இதையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் பிப்ரவரி 16ஆம் தேதி கொல்கத்தாவில் தொடங்குகிறது. இந்த நிலையில் காயம் காரணமாக மே.இ. தீவுகள் அணிக்கு எதிரான டி-20 தொடரில் இருந்து கே.எல்.ராகுல், அக்‌ஷர் படேல் ஆகியோர் விலகியுள்ளனர். 

இவ்வீரர்களுக்கு பதிலாக ருதுராஜ் கெய்க்வாட், தீபக் ஹூடா ஆகியோர் மாற்று வீரர்களாக அணியில் இடம்பெற்றுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.