
ஐபிஎல் 2022 ஏலம் தொடர்பாக ஆச்சர்யமான புள்ளிவிவரம் இது.
வழக்கமாக ஐபிஎல் ஏலத்தில் சிஎஸ்கே நிர்வாகிகள் மற்ற அணிகள் போல சுறுசுறுப்பாக இயங்க மாட்டார்கள், மிக்சர் சாப்பிடுவார்கள் என்றெல்லாம் ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் விமர்சனம் செய்வார்கள். 30 வயதுக்கு மேற்பட்ட வீரர்களை அதிகமாக எடுப்பதாலும் ஏலத்தில் சிஎஸ்கே செயப்படும் விதம் பற்றி ரசிகர்களுக்கு நிறைய மனக்குறைகள் உண்டு.
இந்தமுறை யாரும் சிஎஸ்கேவைக் குறை சொல்ல முடியாது. 10 அணிகளில் சிஎஸ்கே தான் வீரர்களைத் தேர்வு செய்ய அதிகமாகப் போட்டியிட்டுள்ளது.
இந்த வருட ஏலத்தில் சிஎஸ்கே அணி 21 வீரர்களைத் தேர்வு செய்தாலும் 50 வீரர்களுக்காகத் தனது விருப்பத்தைத் தெரிவித்துள்ளது. பல வீரர்களின் ஏலத்தொகை கூடியதால் சிஎஸ்கேவால் 29 வீரர்களைத் தேர்வு செய்ய முடியாமல் போனது. அதேசமயம் தான் விருப்பப்பட்ட வீரர்களில் 42% பேரை சிஎஸ்கே தேர்வு செய்துள்ளது.
ஏலத்தில் ஹைதராபாத் அணி அதிகமான வீரர்களுக்காகப் போட்டியிட்டது போலத் தெரிந்தாலும் அந்த அணி தான் குறைவான எண்ணிக்கையில் விருப்பம் கோரியுள்ளது. 48 வீரர்களைத் தேர்வு செய்ய விருப்பம் தெரிவித்து கடைசியில் 20 பேரைத் தேர்வு செய்தது. 41.67%.
ஏலத்தில் அதிக வெற்றி சதவீதத்தைக் கொண்ட அணி கொல்கத்தா. அந்த அணி 38 வீரர்களுக்கு மட்டும் போட்டியிட்டாலும் 21 வீரர்களைத் தேர்வு செய்துவிட்டது. 55.26%.
The Think tank making it a Super Sunday for all of us! #SuperAuction #WhistlePodu pic.twitter.com/Pb0IBrVc7R
— Chennai Super Kings - Mask Pdu Whistle P
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.