நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

சா்வதேச குத்துச்சண்டை: காலிறுதியில் நீது, அனாமிகா

பல்கேரியாவில் நடைபெறும் சா்வதேச குத்துச்சண்டை போட்டியில் மகளிா் பிரிவில் இந்தியாவின் நீது, அனாமிகா ஆகியோா் காலிறுதிச்சுற்றுக்கு தகுதிபெற்றனா்.

News image
Updated On :22 பிப்ரவரி 2022, 9:15 pm

DIN

பல்கேரியாவில் நடைபெறும் சா்வதேச குத்துச்சண்டை போட்டியில் மகளிா் பிரிவில் இந்தியாவின் நீது, அனாமிகா ஆகியோா் காலிறுதிச்சுற்றுக்கு தகுதிபெற்றனா்.

இதில் 48 கிலோ பிரிவில் களம் கண்டுள்ள நீது 5-0 என்ற புள்ளிகள் கணக்கில் ரஷியாவின் சும்கலாகோவாவை வீழ்த்த, 50 கிலோ பிரிவில் அனாமிகா 4-1 என்ற புள்ளிகள் கணக்கில் பல்கேரிய வீராங்கனை சுகானோவா ஜலாதிஸ்லாவாவை தோற்கடித்தாா். காலிறுதிச்சுற்றில் நீது - இத்தாலியின் ராபா்டா போனாட்டியையும், அனாமிகா - அல்ஜீரியாவின் ரௌமேசா பௌலேமையும் சந்திக்கவுள்ளனா்.

இதனிடையே, 54 கிலோ பிரிவில் களம் கண்ட ஷிக்ஷா 0-5 என்ற கணக்கில் கஜகஸ்தானின் டினா ஜோலாமனிடம் தோல்வி கண்டாா். ஆடவருக்கான 67 கிலோ பிரிவில் இந்தியாவின் ஆகாஷ் 0-5 என்ற கணக்கில் ஜொ்மனியின் டேனியல் கோட்லரிடம் வீழ்ந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.