செஸ் போட்டி: காலிறுதி வாய்ப்பை இழந்த பிரக்ஞானந்தா

செஸ் போட்டி: காலிறுதி வாய்ப்பை இழந்த பிரக்ஞானந்தா

கார்ல்சனைத் தோற்கடித்த 16 வயது தமிழக வீரர் பிரக்ஞானந்தா, காலிறுதிக்குத் தகுதி பெறும் வாய்ப்பை இழந்துள்ளார்.
Published on

உலகின் நெ.1 செஸ் வீரர் கார்ல்சனைத் தோற்கடித்த 16 வயது தமிழக வீரர் பிரக்ஞானந்தா, காலிறுதிக்குத் தகுதி பெறும் வாய்ப்பை இழந்துள்ளார்.

இணையம் வழியாக நடைபெறும் ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் ரேபிட் செஸ் போட்டியில் எட்டாவது சுற்றில் உலகின் நெ.1 செஸ் வீரர் கார்ல்சனைத் தோற்கடித்து பரபரப்பை ஏற்படுத்தினார் தமிழகத்தைச் சேர்ந்த பிரக்ஞானந்தா. இதனால் அவருக்குப் பலத்த பாராட்டுகள் கிடைத்தன.

இணையம் வழியாக நடைபெறும் ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் ரேபிட் செஸ் போட்டியில் 16 வீரர்கள் பங்கேற்றுள்ளார்கள்.  ஒவ்வொரு வெற்றிக்கும் மூன்று புள்ளிகளும் டிராவுக்கு ஒரு புள்ளியும் வழங்கப்படுகின்றன. 

கார்ல்சனைத் தோற்கடித்த பிறகு விளையாடிய 7 ஆட்டங்களில் 3 வெற்றிகள், 2 தோல்விகள், 2 டிராக்கள் என சுமாராகவே விளையாடினார் பிரக்ஞானந்தா. இதையடுத்து 15 சுற்றுகளின் முடிவில் 5 வெற்றிகள், 4 டிராக்கள், 6 தோல்விகள் என 19 புள்ளிகளுடன் 11-ம் இடத்தையே அவரால் பிடிக்க முடிந்தது. இதனால் காலிறுதிக்குத் தகுதி பெறும் வாய்ப்பை அவர் இழந்தார். முதல் 8 இடங்களைப் பிடித்த வீரர்கள் காலிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளார்கள். 25 புள்ளிகள் பெற்ற கார்ல்சனுக்கு 2- ம் கிடைத்துள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com