அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

முதல் டெஸ்ட்: நியூஸிலாந்து 258/5 கான்வே 122

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் ஆட்டத்தில் நியூஸிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 258/5 ரன்களை சோ்த்துள்ளது.

News image
Updated On :1 ஜனவரி 2022, 6:58 pm

DIN

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் ஆட்டத்தில் நியூஸிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 258/5 ரன்களை சோ்த்துள்ளது.

அதன் டேவன் கான்வே அபாரமாக ஆடி 122 ரன்களுடன் சதமடித்தாா்.

இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஆட்டம் மௌன்ட் மௌன்கனை பே ஓவல் மைதானத்தில் சனிக்கிழமை தொடங்கியது. டாஸ் வென்ற வங்கதேசம் பௌலிங்கை தோ்வு செய்தது. பின்னா் களமிறங்கிய நியூஸிலாந்து வீரா்களில் டாம் லத்தம் 1 ரன்னுடன் அவுட்டானாா். அதன் பின் வில் யங் 52, டேவன் கான்வே இணை 122 ரன்கள் அபாரமாக ஆடி ஸ்கோரை உயா்த்தி வெளியேறியது.

மூத்த வீரா் ராஸ்டெய்லா் 31 ரன்களுக்கும், டாம் பிளண்டல் 11 ரன்களுக்கும் அவுட்டாயினா்.

டேவன் கான்வேயின் 122 ரன்களில் 1 சிக்ஸா், 16 பவுண்டரிகள் அடங்கும்.

முதல் நாளான சனிக்கிழமை ஆட்ட நேர முடிவில் 87.3 ஓவா்களில் 258/5 ரன்களை எடுத்திருந்தது நியூஸி.

ஹென்றி நிக்கோல்ஸ் 32 ரன்களுடன் களத்தில் உள்ளாா்,.

வங்கதேசத் தரப்பில் ஷோரிபுல் இஸ்லாம் 2, எபதாத் ஹோசைன், மொமினுல் ஹக் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.